அல்லு அர்ஜுனை தொடர்ந்து பாகுபலி நடிகர் ராணா மீது வழக்கு பதிவு செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு மொழியில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ராணா டகுபதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார்.
அதன் பின்னர் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்தார். இருந்தாலும், ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தான் ராணா உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர்கள். இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்னன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ராணா டகுபதி குறித்த தகவல்:
தற்போது இவர் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ராணா டகுபதி மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பிலிம் நகரில் டெக்கான் கிச்சன் என்ற ஓட்டல் இருக்கிறது,
ராணா குடும்பம் செய்தது:
இந்த ஓட்டலின் நிலம் டகுபதி குடும்பத்தினருக்கு சொந்தமானது. 2022 ஆம் ஆண்டு பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ நந்த குமார் என்ற நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் தங்களுடைய சொந்த நிலத்தை மீட்க வேண்டி டகுபதி குடும்பத்தினர் சட்டவிரோதமாக அந்த ஓட்டலை இடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக நந்தகுமார் நீதிமன்றத்தில் டகுபதி குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
நீதிமன்றம் உத்தரவு:
அதில், ஹோட்டலை இடித்ததால் இருபது கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கை ஏற்று இந்த விவகாரத்தை போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து கடந்த வாரம் டகுபதி குடும்பத்தினர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது.
போலீஸ் வழக்கு பதிவு:
அதன் அடிப்படையில் நடிகர் நடிகர் வெங்கடேஷ் டகுபதி, அவரது சகோதரரும் தயாரிப்பாளருமான சுரேஷ் டகுபதி, சுரேஷின் மகனும் நடிகருமான ராணா டகுபதி, ராணாவின் சகோதரரும் தயாரிப்பாளருமான அபிராம் டகுபதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 448, 452, 458 மற்றும் 120B பிரிவுகளின் கீழ் – அத்துமீறல் மற்றும் குற்றவியல் சதி – குற்றம் ஆகியப் பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக டகுபதி குடும்பத்தினர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.