லப்பர் பந்து பட நடிகையின் மீது போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். ஹரிஷ் கல்யாண் - தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.
ஸ்வாசிகா குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் கெத்து தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்வாசிகா. இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. இவர் இதற்கு முன்பே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வைகை என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப்பின் இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

ஸ்வாசிகா திருமணம்:
அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் சீரியல்களிலும் நடித்திருந்தார். அப்போது இவர் தன்னுடன் நடித்த நடிகர் பிரேமை காதலித்தார். இவர்கள் இருவருமே சில வருடமாக காதலித்து வந்தார்கள். பின் ஒரு வழியாக இவர்கள் இரு வீட்டாரிடமும் சம்மதம் வாங்கி இருந்தார்கள். பின் கடந்த ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்க்கு பிறகும் நடிகை ஸ்வாசிகா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் .

ஸ்வாசிகா மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்வாசிகா மீது போலீசில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மிக பெரிய அளவில் மலையாளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக மலையாள நடிகை ஒருவர் எம்எல்ஏ, நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு என பல பேர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் முகேஷ், இடைவேளை பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள்.

புகார் கொடுத்த காரணம்:
இதைத்தொடர்ந்து அந்த மலையாள நடிகை, ஸ்வாசிகா மீது போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். காரணம், தன்னை பற்றி யூடியூப் சேனல் பேட்டியில் அவதூறாக பேசி இருக்கிறார்கள் என்று கூறு இருக்கிறார். அதோடு ஸ்வாசிகா மட்டும் இல்லாமல் பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீதும் புகார் கொடுத்து இருக்கிறார். பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.






