சொத்துக்காக தாயை கொடுமை செய்த சங்கீதா.! போலீஸ் நிலையத்தில் தாய் புகார்.!

0
1494
Sangeetha
- Advertisement -

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அந்த வகையில் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு சில மலையாள படத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for pithamagan sangeetha mother

நடிகை சங்கீதா எண்ணற்ற படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் `வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள்’ என நடிகைசங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையும் படியுங்க : ராட்சசன் கிறிஸ்டோபர் இந்த சீரியலில் நடித்துள்ளாரா.! வெளியான புகைப்படம்.! 

- Advertisement -

இதுகுறித்து விசாரித்ததில்  சென்னை வளசரவாக்கத்துல இப்ப குடியிருக்கிற வீடு தன் மாமனார் வீட்டு வழியில வந்த சொத்து. அந்த வீட்ல இப்ப பானுமதி தரை தளத்துலயும் அவங்களோட பொண்ணு சங்கீதா மாடியிலயும் குடியிருக்காங்க. அந்த வீடு இப்ப சங்கீதா பேர்ல இருக்கு.எங்கே தனது சகோதரர்கள் அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம்.

அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க இதனால் தான் அவரது அம்மாவை வீட்டை விட்டு விரட்டி அடித்துள்ளார் சங்கீதா. இதுகுறித்து சங்கீதாவிடம் விசாரித்துள்ள போது சினிமா தொடர்பான விஷயம்னா பேசலாம். இது என் தனிப்பட்ட விஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பலை என்று பதில் அளித்துள்ளாராம் சங்கீதா.

-விளம்பரம்-
Advertisement