நீதி போராளி சூர்யாவை ஒரு வருடமாக காணவில்லை – பா ஜ க கட்சினர் வெளியிட்ட போஸ்டரால் எழுந்த சர்ச்சை.

0
996
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்து இருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன வழக்கறிஞராக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் ஜெய்பீம் சொல்லி இருக்கிறது. இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இருந்தாலும்,‘ஜெய்பீம்’ சாதனை படைத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

சூர்யா நடிக்கும் படங்கள்:

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து சூர்யா அவர்கள் வாடிவாசல், பாலா இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்று பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா-ஜோதிகா மீது புகார்:

இந்த நிலையில் சூர்யா- ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன்னா, ஜெய் பீம் படம் குறித்து எழுந்த சர்ச்சை தான் அதற்கு காரணம். ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

-விளம்பரம்-

நீதிமன்றம் போட்ட உத்தரவு:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் அந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர், கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக பாஜக கட்சியில் இருந்து பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.

சூர்யா காணவில்லை போஸ்டர்:

அதில், தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உடனே லெட்டர் பேடை தூக்கிக்கொண்டு வந்து குரல் கொடுக்கும் சமூக நீதிப் போராளி அண்ணன் சூர்யாவை கடந்த ஒரு வருடமாக காணவில்லை. ஆண் தாய் ஆட்சியில் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நினைத்து விட்டு கோமாவிற்கு போய்விட்டார் போலும்! என்று சூர்யாவின் புகைப்படத்தை போடு காணவில்லை என்று போஸ்டர் வைத்திருக்கிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறதுஇதற்கு சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழு தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement