என் அப்பா போலீஸ்னு போலீசிடமே வாக்குவாதம் செய்தார் – விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார் அளித்த குடியிருப்பு வாசிகள்.

0
990
vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுஇருந்தார். கடந்த இரண்டு வருடங்களாகவே என்னுடைய வாழ்க்கை மிகவும் கரடு முரடாக இருந்தது. அதை நான் கருப்பு நாட்கள் என்று கூட சொல்லலாம். என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தேன். நான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகும் என்றும் ஒருபோதும் நினைத்தும் பார்க்கவில்லை. இதனால் நான் மதுவுக்கு அடிமையானேன். தினமும் நான் போதையில் தான் இருந்தேன். நிறைய மன அழுத்தம், தூக்கமில்லாமல் உடலை பாதிப்பது.

- Advertisement -

விவாகரத்து, மகன் பிரிவு, உடல்நல பிரச்சனை, குடிப்பழக்கம், மன அழுத்தம் என பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தேன். பின்னர் நான் மெதுவாக இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர ஆரம்பித்தேன் என்று கூறி இருந்தார் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக குடியிருப்பின் செக்ரடரி, காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 021 ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலையில் சத்தமான இசையைக் கேட்டதாகவும், இதனால் அக்கம் பக்கத்தினர் துக்கத்தில் இருந்து விழித்துள்னர்.

நீண்ட நேரம் கதவை தட்டியும் விஷ்ணு விஷாலின் பிலாட் தீர்க்கப்படாததால், அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் 100க்கு அழைத்துள்ளனர். பின்னர் அங்கே இரண்டு காவலர்கள் வந்த பின்னர் குடியிருப்பு வாசிகள் அவர்களுடன் சென்று விஷ்ணு விஷாலுடன் கேட்ட போது அவர் குடித்து இருந்ததாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், விஷ்ணு விஷால் அடிக்கடி இப்படி சத்தமாக பாட்டு போட்டும், அடிக்கடி தனது நண்பர்களை அழைத்து வந்தும் கூத்தடிப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய அப்பா ஒரு ஒய்வு பெற்ற அதிகாரி அதனால் எப்படி என் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று போலீசாரிடம் விஷ்ணு விஷால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிடபட்டுள்ளதாம்.

-விளம்பரம்-
Advertisement