விடுதலை படம் பார்க்க சென்று போலீசிடம் வாக்குவாதம் செய்த வளர்மதி மீது 3 பிரிவுகளில் வழக்கு- என்னென்ன பிரிவு தெரியுமா ?

0
404
valarmathi
- Advertisement -

விடுதலை படத்தை பார்க்க சென்று சிறுவர்களை பாதியிலேயே திரையரங்கில் இருந்து போலீசால் வெளியேற்ற முயற்சி செய்யபோது பெற்றோர்கள் சண்டையிட்டு இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விடுதலைப் படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் ஐனாஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த படத்தைக் காண 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்திருக்கின்றனர்.

அப்போது படத்தை பாதியிலேயே நிறுத்தி போலீசார் திரையரங்கில் இருந்து சிறுவர்களை வெளியேற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்தவளர்மதி, மக்களின் வலியை புரிந்து கொள்ளும் படங்களை சிறுவர்களுக்கு காட்டுவதில் என்ன தவறு? தேவையில்லாத கவர்ச்சி படங்களையும், தவறு தூண்ட செய்யும் படங்களை எல்லாம் திரையரங்கில் போடுகிறீர்கள். அப்போது யாரும் சிறுவர்களை வெளியேற்ற முயற்சி செய்வதில்லை.

-விளம்பரம்-

மக்களின் வலியை உணர்த்தும் படங்களை பார்க்கும்போது மட்டும் சிறுவர்களை வெளியேற்றுவதா? என்று போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பிறகு போலீசார் திரையரங்கை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் விடுதலை படம் திரையிடப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே வளர்மதி திமுக அரசுக்கு எதிராக பேசி பல முறை கைது செய்யப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ’விடுதலை’ படத்தை தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement