இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
பா ரஞ்சித் திரைப்பயணம்:
சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்தணர் கிடைக்காமல் அய்யோத்தி சென்று ராமனை கையோடு கூட்டிவந்தேன்.😀
— clonetamizh (@clonetamizh) May 9, 2023
– விடுதலை சிகப்பி
.#viduthalaisigappi #director #neelam #paranjith #tamilnadu #government pic.twitter.com/z09B67tX3Q
பா ரஞ்சித் இயக்கும் படம்:
இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பவர் விடுதலை சிகப்பி.
பா ரஞ்சித் உதவி இயக்குனர் மீது புகார்:
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடந்த அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசும்போது இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.