இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று மிகப்பெரிய இசையமைப்பாளராக விஸ்வரூபம் எடுத்து நிற்பதுக்கு முழு முதற்காரணம் இயக்குனர் மணி ரத்தினம். ஆம், மணிரத்னம் தான் இயக்கிய ரோஜா படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகபடுத்தினார். அதை தொடர்ந்து இன்று வரை அவர் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “செக்க சிவந்த வானம்” ஏகப்பட்ட நட்சத்திரங்களுடன் பிரமாண்டமாக இந்த படம் உருவாகியுள்ளது. எனவே இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரைலர் கூட மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதில் என்ன ஸ்பெஷல் என்றால், படத்தின் பாடல்களை ஏ.ஆர் .ரஹ்மான் அவர்களே நேரடியாக “Live Performance” செய்ய உள்ளார்.மேலும் சினிமாவில் என்னுடைய குருநாதர் அவர்தான், அவருக்காக இதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களை நிச்சயம் கவரும் மேலும் அனைத்து பாடல்களிலும் வெரைட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .