விஜய் ஆண்டனி மகள் திடீர் மரணம் – முதல் ஆளாக ஆறுதல் சொல்ல வந்த சந்தானம், கண்ணீரோடு வெளியில் காத்திருந்த விஜய்யின் தாயார் ஷோபா.

0
542
- Advertisement -

விஜய் ஆண்டனி மகள் இறப்பை தொடர்ந்து பிரபலங்கள் பலர் விஜய் ஆண்டனி வீட்டிற்க்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுபலினியாக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.

விஜய் ஆண்டனியின் 16 வயது மகளான மீரா, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார். நேற்று இரவு தூங்க சென்ற மீரா இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்துஅதிர்ச்சியடைந்து உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் சத்தம் கேட்டு ஓடோடி வந்துள்ள விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தூக்கில் தொங்கியபடி இருந்த தனது மகளை கதறி அழுதுள்ளார்.உடனே காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீரா , சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. மீராவின் இறப்பு திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறது. இந்த செய்தியை கேட்டு பல்வேறு பிரபலங்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு நேரில் வந்த வண்ணம் இருக்கின்றனர். நடிகர் சந்தானம் முதல் ஆளாக விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்தார். அவரை தொடர்ந்து மோகன் ஜி வர, விஜய்யின் தாயார் ஷோபா வீட்டில் வெளியே கண்ணீருடன் காத்திருந்தார்.

Advertisement