இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா வைரசின் அடுத்த நிலையான ஓமைக்கரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இப்படி கடந்த மூன்று வருடங்களாகவே கொரோனாவின் தாக்கம் இந்தியாவை விட்டு செல்லவில்லை. இதனால் லட்சக்கண மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகிறார்கள்.
மேலும், கொரோனா தாக்கத்தால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். மக்கள் கோவிட் தடுப்பூசி போட்டும், முக கவசம் அணிந்தும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாகவும், முக கவசமும் அணிவதை நிறுத்த கூடாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க கட்டுப்பாடுகள்:
கொரோனா பரவலை தடுப்பதற்காக மக்கள் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட கூடாது என்றும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கொரோனா குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் கொரோனாவின் தாக்கம்:
அதோடு கடந்த வாரம் மட்டும் இந்தியாவில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இப்படி ஒரு நிலையில் சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் கடந்த வாரம் மற்றும் பல நடிகர்களுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொடங்கி தமிழ் நடிகை திரிஷா வரை என பல முன்னணி நடிகர்களுக்கு கொரோனா வைரஸ் வந்துள்ளது.
கடந்த வாரம் மட்டும் கொரோனா பாதித்த நடிகர்கள்:
இதை அவர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். மேலும், கடந்த வாரம் மட்டும் மகேஷ்பாபு, திரிஷா, அருண் விஜய், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் தமன், நடிகை மீனா, சத்யராஜ், ஷெரின், இயக்குனர் பிரியதர்சண், உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருக்கிறது. இப்படி பிரபலங்களை விட்டுவைக்காத கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டும் விட்டுவைக்க போகிறதா? என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
கொரோனா மூன்றாவது அலை நிலைமை:
நடிகை ஷெரீனுக்கு கடந்த வருடமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், அரசாங்கம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளை மதித்தும் சமூக இடைவெளியுடனும் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் முதல் சமூக விழிப்புணர்வு ஆர்வலர்கள் வரை என பலரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இன்னும் சில வாரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்து மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது அலை தொடங்கி இருப்பதால் அனைவரும் கவலையிலும் இருக்கிறார்கள்.