முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் விவேக்கின் கனவு திட்டத்தை தொடரும் செல் முருகன்- குவியும் பாராட்டுக்கள்

0
648
Cell
- Advertisement -

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் செல் முருகன் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். மேலும், தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். பின் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Actor Vivek Escaped From Drone Accident

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

- Advertisement -

விவேக் கடைசியாக நடித்த படம்:

இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். எந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். படத்தில் விவேக் காமெடி வேற லெவல் என்று சொல்லலாம். அதேபோல் மறைந்த விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

விவேக்கின் நண்பர் செய்த செயல்:

இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து பலரும் விவேக்கின் துயரில் இருந்து மீளவில்லை. மேலும், விவேக்கின் இறப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தினாலும் நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். செல் முருகன் 26 ஆண்டுகளாக விவேக்குடன் இருக்கிறார். விவேக் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார். சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். விவேக்கின் இறுதி சடங்கில் செல் முருகன் கண் கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் பயங்கர வைரலானது.

-விளம்பரம்-

விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு:

அதோடு விவேக்கின் இறப்பிற்கு பின்னரும் விவேக்கை மறக்காமல் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார் செல்முருகன். அந்த வகையில் சமீபத்தில் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு விவேக்குடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார். அந்த அளவிற்கு விவேக் மீது அதிக அன்பும்,மரியாதையும் கொண்டவர். இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம். இதை ஒட்டி அவரின் உருவப்படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ் பி அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களும் திறந்து வைத்தனர்.

செல்முருகன் செய்த செயல்:

மேலும், விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கி இருக்கிறார். இதை தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் தலைமை தாங்கி விவேக் கிரீன் கலாம் திட்டத்தை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ் பி அரவிந்தன் ஐபிஎஸ், நடிகர்கள் பாபி சிம்ஹா,உதயா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் செல் முருகனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் வருகிறார்கள்.

Advertisement