-விளம்பரம்-
Home செய்திகள்

அட சூப்பர் போங்க, ஒரு கிலோ தக்காளி விலை இவ்ளோ தானா – மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.

0
1362
Tomato

ஒரு கிலோ தக்காளி ₹80 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நாடு முழுவதுமே ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது தக்காளியின் விலை தான். இந்தியாவில் காய்கறி விலைகள் உயர்வதும் குறைவதும் வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் வெங்காயத்தின் விலை தான் அடிக்கடி ஏறி உயர்ந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

எப்போவாவது சில முறை தான் மற்ற காய்கறிகளின் விலைகள் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை உச்சத்திற்கு சென்று மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கிலோ தக்காளி விலையை 200 ரூபாய்க்கு விற்கிறார்கள். பிற மாநிலங்களில் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் தக்காளியின் விலை 300, 400 என்று சென்று கொண்டிருக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் தங்கத்தின் விலைபோல தினமும் தக்காளியின் விளையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்களும் என்ன செய்வதென்று புரியாமல் அச்சத்திலும் வறுமையிலும் புலம்பி தவித்து வருகிறார்கள். மேலும், இந்த தக்காளி உயர்வுக்கு காரணம் தக்காளி வரத்து குறைந்ததால் தான் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

சில இடங்களில் தக்காளியின் விலை அதிகமாக விற்பதால் வியாபாரிகளும் வாங்கி விற்பனை செய்ய தயங்குகிறார்கள். மேலும், அவஸ்தைப்படும் மக்கள் தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் உணவு,நலன் மற்றும் பொதுவிநாயகம் அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதாவது, NAFED மற்றும் NCCF மூலம் செயல்படும் விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளிக்கு 80 ரூபாய்க்கு மட்டும் விற்கப்படும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது. இதை இன்று முதல் புது டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி சந்தை விலையை பொறுத்து விற்பனை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவிக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாக தான் இருக்கிறது என்று மாநில வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். மேலும், பருவமழை மற்றும் உற்பத்திக்கு ஏற்ப தக்காளி விலை அதிகரிக்க, குறைய கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் உழவர் சந்தை மூலமாகவும், நியாய விலை கடைகள் மூலமாகவும் தக்காளி விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news