பிக் பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பெண் வழக்கறிஞர் புகார் அளித்து இருந்து நிலையில் தற்போது விக்ரமன் தன்னுடன் பேசிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.அதில் அவர், “தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, என் பெயர் கிருபா முனுசாமி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். நான் கடந்த 2020- ஆம் ஆண்டு மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் National Overseas Scholarship-இன் மூலம் லண்டனில் சட்டத் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட பலரும் அறிந்ததே! தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் லண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார்.அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பு இருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னை பலமுறை வேசி என்றும் பிற ஆபாச வார்த்தைகளாலும் விக்ரமன் அவமானப்படுத்தியிருக்கிறார். ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார். அதையும் மீறி அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.80,000 ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற” என்று கீழ்த்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாது. நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து அவருடைய தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று குற்றம்சாட்டினார்.
இதுபோல கடந்த மூன்று ஆண்டுகளின் என்னை பலவிதமான குற்றவுணர்ச்சிகளுக்கு ஆளாக்கி ஜாதிய ஒடுக்குமுறையை குறித்தோ, ஒரு தனி மனிதராக என்னுடைய சுய மரியாதையை குறித்தோ பேசுவதே தவறு என்ற உணர்வு வரும் நிலைக்கு என்னை தள்ளினார். இவருடைய உளவியல் ரீதியான ஒடுக்குமுறையினால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலேயே என்னை வைத்திருந்தார் என்றும் கூறி இருந்தார்.
. என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ஜாதி ரீதியில் அசிங்கமாக பேசி, இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துகொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும்” என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் தன்னை காதலித்து விக்ரமன் ஏமாற்றிவிட்டதாக இருவரும் வாட்சப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். விக்ரமன் தன்னுடன் காதலில் இருந்த நேரத்தில் தனது மேனேஜர் என கூறிக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தார். அதை அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார். 1.5 வருடமாக இப்படி ஏமாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு 15 பேரை விக்ரமன் இப்படி காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருக்கிறார்.
He had intentionally exploited my intellect to grow his political career. From the statement he read while joining the party to Udumalai Shankar's memorial day speech, everything was my knowledge. He stole the content of the letter I wrote to him about Ambedkar for his BB fame. pic.twitter.com/1rntMwS30M
— Kiruba Munusamy (@kirubamunusamy) July 16, 2023
அவரை பற்றி கட்சியில் புகார் அளித்தேன், இது பற்றி விசாரணை நடந்த குழு அமைத்தார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.”கட்சியின் தலைவர் மீது கூட விக்ரமன் மரியாதையுடன் பேசியது இல்லையாம். தலைவர் பற்றி மோசமாக விக்ரமன் தாக்கி பேசி இருக்கும் வாட்சப் உரையாடல்களையும் கிருபா முனுசாமி வெளியிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவு மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.