தற்போது உள்ள மக்கள் வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பதை விட வீட்டிலேயே உட்கார்ந்து படி சீரியலை பார்க்கும் நபர்கள் தான் அதிகமாக உள்ளனர்.அதுவும் சீரியலுக்கு என ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வந்த வண்ணம் உள்ளன.மேலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்க்க சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமாக உள்ளனர்.
சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் நாளுக்குநாள் ஹிட்டு கொடுத்து மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதனாலேயே ஒருவருக்கு ஒருவர் (சேனல்கள்) போட்டி போட்டு நல்ல தொடர்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய ரீமேக் தொடர்களையும் கொடுத்துள்ளார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சேனல் முதலிடம் பிடிப்பது என்ற போட்டியும் சின்னத்திரையில் நடந்து வருகின்றன. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ், கல்யாணபரிசு, அருந்ததி, கண்மணி, நாயகி போன்ற பல சீரியல்கள் அதிக அளவு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வரிசையில் விஜய் டிவி தற்போது ஒரு புதிதாக ஒரு சீரியலை விரைவில் கொண்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அது பாம்பு கதையை மையமாகக் கொண்ட சீரியல் என செய்தி வெளியாகி உள்ளது. இந்த பாம்பு கதை கொண்ட தொடரின் பெயர் தாழம்பூ.இந்த தாழம்பூதொடருக்கான ப்ரோமோவும் வெளிவந்து. இந்த தொடரில் சித்து ப்ளஸ் 2 படத்தில் நடித்த சாந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.