கல்யாணம் ஆச்சா இல்லையா, உங்க புருஷன் கூட ஏன் போட்டோ போடவே மாற்றீங்க – ரசிகர் கேள்விக்கு சாந்தினி அளித்த பதில்.

0
832
Chandini
- Advertisement -

கிளாமர் போட்டோ ஷூட் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தினி பதிலடி கொடுத்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவான ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். சித்து +2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவினாலும் நடிகை சாந்தினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சித்து +2 படத்திற்கு பின்னர் இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

-விளம்பரம்-

மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

நடன இயக்குனருடன் திருமணம் :

9 வருடங்களாக காதலித்த வந்த நிலையில் நடிகை சாந்தினி இடையில் கற்பமானதால் இரு குடும்பத்தினரும் அவசர அவசரமாக இந்த திருமண ஏற்பாட்டை செய்துள்ளனர் என்ற சில கிசுகிசுக்களும் உலாவி வருகிறது. திருமணத்திற்குப் பின்னர் கூட தொடர்ந்து நடித்து வந்தார் சாந்தினி. சொல்லப்போனால் இந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கிளாமர் போட்டோ ஷூட் :

அதேபோல நடிகை சாந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

-விளம்பரம்-

கிளாமர் போட்டோ ஷூட்க்கு காரணம் :

அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடையில் படு கவர்ச்சியான போஸ்களை கொடுத்துள்ளார் சாந்தினி. இதற்கு ரசிகர் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அப்போது ரசிகர் ஒருவர் ‘ஏன் இப்போ கவர்ச்சியான போட்டோ ஷூட் பக்கம் சென்றுவிடீர்கள்’ என்று கேட்டிருந்தார்.

கணவர் குறித்து சாந்தினி :

இதற்கு பதில் அளித்த சாந்தினி ‘ஒரு நடிகர் பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும் நான் இதற்கு முன்னால் ட்ரேடிஷினலாகவும் கிலாமராகவும் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறேன். ஆனா, விஷயம் என்னென்னா இப்போ தான் நீங்க பாக்குறீங்க ‘ கூறியுள்ளார். அதே போல இன்னொரு ரசிகர் ‘உங்கள் கணவருடன் ஏன் போட்டோ போடுவதில்லை’ என்று கேட்டதற்கு ‘தனிப்பட்ட வாழ்க்கையை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் அதனால் தான்’ என்று கூறியுள்ளார் சாந்தினி. அதே போல் உங்களின் B*** சைஸ் என்ன என்று கேட்டதற்கு

Advertisement