தமிழில் பல சீரியலில் நடித்த நடிகை சந்திரா தனது 40 வயதில் குழந்தைக்கு தாயாகி இருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.
திரைப்படங்களை விட இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது தொலைக்காட்சி தொடர்கள் தான். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தனது பயணத்தை தொலைக்காட்சி சீரியல் பக்கம் தொடர்ந்தார். இதுவரை தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, துளசி பாசமலர் போன்ற பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்துள்ளார் சந்திரிகா. இறுதியாக தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். சமீப காலமாக இவர் எந்த படங்களின் நடிக்கவில்லை. இருப்பினும் மலையாள தொடர்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்திருந்தார்.
சந்திரா ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள தொடரில் நடித்து வந்தார். இதே தொடரில் டோஷ் க்றிஸ்டியும் நடித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்து இருந்த சந்திரா கடந்த நவம்பர் மாதம் க்றிஸ்டியை மணமுடித்தார். மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இவருக்கு சமீபத்தில் மகன் பிறந்து இருக்கிறார். தன் மகனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அது ஒரு பையன். எங்களுக்காகவும் எனக்காகவும், என்னுடைய சின்ன குழந்தைக்காகவும் பிராத்தனை செய்த எங்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவரது மகனின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. .