‘உண்மை சார்’ – மோடி பற்றி அன்று சந்திரபாபு நாயுடு சொன்னதை சுட்டிக்காட்டிய பிரகாஷ் ராஜ்

0
377
- Advertisement -

மோடியை விமர்சித்து சந்திரபாபு நாயுடு போட்டிருந்த பதிவுக்கு பிரகாஷ்ராஜ் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது. இந்த 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.

-விளம்பரம்-

அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் நடந்தது. மேலும், பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருந்தார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியாகியிருந்தது. பாஜக முதலிடத்தை பிடித்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பாஜகவுடன் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பாராளுமன்ற தேர்தல்:

இந்த கூட்டணியில் தெலுங்கு தேசம் 16 சீட்டுகளும், ஆர்ஜேடி 12 சீட்டுகளும் வென்றிருக்கிறது. இந்த இரண்டு கட்சியும் இந்தியா கூட்டணி பக்கம் மாறினால் ஆட்சி மாற வாய்ப்புள்ளது. ஆனால், இன்று நடந்த என் டி ஏ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமாரும் மோடி பிரதமருக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள். இதனால் பிரதமர் மோடி உடைய ஆட்சி தான் நிலைத்து நிற்கும் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு சோசியல் மீடியாவில், இந்தியாவின் இறையாண்மை மிக்க அரசியல் கட்டமைப்பை மோடி திட்டம் போட்டு அளித்து வருகிறார். பாஜக ஆட்சியில் சுதந்திரமும், ஜனநாயகமும் தாக்கப்பட்டு வருகிறது. விசாரணை அமைப்பான சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அரசியலமைப்பின் உயரிய கட்டமைப்பான தேர்தல் ஆணையத்தை கூட மோடி விட்டு வைக்கவில்லை என்று விமர்சித்து பேசியிருந்தார்.

-விளம்பரம்-

பிரகாஷ்ராஜ் பதிவு:

இப்படி அவர் போட்டிருந்த பதிவை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி கிண்டல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து பிரகாஷ்ராஜ், சந்திரபாபு நாயுடுவின் கருத்து முற்றிலும் உண்மை என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பிரகாஷ் ராஜ், பாஜக கட்சியையும் மோடியையும் பயங்கரமாக விமர்சித்து கிண்டல் கேலியும் செய்து வருகிறார்.

மோடி-பிரகாஷ்ராஜ் சர்ச்சை:

அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் மோடியை ஒருமையில் பேசி இருந்தார். பின் பேட்டியில் கூட அவர், மோடி தியானம் செய்வதை கிண்டல் கேலி செய்திருந்தார். இதற்கு பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி மோடி எது செய்தாலும் பிரகாஷ்ராஜ் விமர்சித்து கிண்டல் செய்து வருகிறார்.

Advertisement