சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் வகையில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார். பின் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் தொலைக்காட்சி துறைக்கு நடிகராக அருண் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து துறைக்கு அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் பல வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் சந்திரலேகா.
இந்த தொடரில் சபரிநாதன் என்ற கதாபாத்திரத்தில் அருண் ராஜன் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே சேர்ந்திருக்கிறது. மேலும், இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளர் என்ற விருதையும் அருண் வாங்கி தொகுப்பாளர். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார். தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இவர் பதிவிட்டு வருவார்.
சந்திரலேகா சீரியலில் விலகிய அருண் ராஜன்:
இந்த நிலையில் பல ஆண்டுகலாக சந்திரலேகா சீரியலில் நடித்து வரும் அருண் ராஜன் வெளியேறி இருக்கிறார். மேலும், இவருக்கு பதிலாக அந்த தொடரில் சபரி என்ற கதாபாத்திரத்தில் அருண் என்ற வேறு ஒரு நடிகர் நடிக்க இருக்கிறார். இவரும் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அருண் ராஜன் சீரியல் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி பிரிந்தார்கள். இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அருண் ராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
சீரியலில் விலகியதற்கு விளக்கம் கொடுத்த அருண்ராஜன்:
அதில் அவர் கூறியிருப்பது, சந்திரலேகா தொடரை பொருத்தவரையில் தேதி ஒழுங்காக மேனேஜ் பண்ணமாட்டுகிறார்கள். ரோஜா, அன்பே வா தொடருக்கு பிறகு அவங்க ஃப்ரீயா இருக்கிற டைமை எங்களுக்கு தேதி ஒதுக்குகிறார்கள். நான் கொடைக்கானலில் இருக்கிறேன். அங்கே எனக்கென்று சில கமிட்மெண்ட் இருக்கு. திடீர்னு போன் பண்ணி நாளைக்கு சூட்டிங்கிற்கு கிளம்பி வாங்க என்று சொல்கிறார்கள். சென்னைக்கு கிளம்பி வந்தாலும் ரெண்டு, மூணு நாள் தான் எனக்கு சூட் இருக்கு. மற்ற எல்லா நாளும் சும்மாவே இருக்குற மாதிரி இருக்கு.
ஷூட்டிங்கில் நடந்தது:
இன்னைக்கு நமக்கு சூட் இருக்கு என்று சொன்னாங்கனா நாம வந்து நடித்துவிட்டு கிளம்பிடலாம். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல் திடீர் திடீர்னு சொல்லும் போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கிடைத்த எட்டு வருஷமாக இந்த ப்ராஜெக்ட் செய்கிறேன். இதுக்காக மற்ற பிராஜக்ட் எல்லாத்தையும் விட்டுட்டு இதுக்கு மட்டுமே தேதி கொடுத்திருந்தேன். ஐந்து நாள் ஷூட் இருக்குன்னு சொல்லிட்டு ரெண்டு நாள் மட்டும் எடுத்தார்கள். அடுத்து என்ன? என்று அப்டேட் கூட பண்ணவில்லை. போன் பண்ணாலும் யாரும் அட்டென்ட் பண்ணவில்லை. சரியான சூழல் நம்ம வேலை பார்க்கிற இடத்தில் இருந்தால் தாராளமாகப் பார்க்கலாம். அது இல்லை என்கிறபோது வேலை பார்க்கும் ஆர்வமே இல்லாமல் போய்விடும்.
அருண் ராஜன் அடுத்த ப்ராஜெக்ட்:
அதனால் தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவங்க வேற நபர் பார்க்கும் வரைக்கும் நடித்துக் கொடுத்து இருந்தேன். எல்லா இடங்களிலும் பாலிடிக்ஸ் இருக்கு. அப்படித்தான் இந்த இடத்திலும் இருக்கு. கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான பிராஜக்ட் பண்ணி ஆகிவிட்டது. நான் எப்பவும் காசுக்காக வேலை பார்க்கிறது கிடையாது. அந்த சூழல் செட் ஆகாது என்று தெரிந்தால் சீரியல் இருந்து விலகிவிடுவேன். இதைத்தொடர்ந்து எனக்கு இப்போது நிறைய பிராஜக்ட் வந்து கொண்டிருக்கிறது. ஒரு டிரிப் பிளான் பண்ணி இருக்கேன். அந்த ட்ரீட் முடித்துவிட்டு சீக்கிரமே நல்ல ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.