தன்னுடைய வருங்கால கணவர் குறித்து சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்ட நிலையில் தற்போது திருமணம் முடிந்துள்ளது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவி.
ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து இருந்தது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருந்தார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
சந்திரலேகா சீரியல்:
மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இந்த சீரியல் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. இவர் சென்னையில் உள்ள பிரபல பி எம் ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்திருந்தார்.
ஸ்வேதா குறித்த தகவல்:
இவர் ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக ஸ்வேதா நடித்திருந்தார். முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி சத்யா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது பாரதிதான்.
ஸ்வேதா திரைப்பயணம்:
ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 9 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் சினிமாவில் வாய்ப்பு குறையவே 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சன் மியூசிக் தொகுப்பாளருடன் திருமணம் :
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்வேதா தான் திருமணம் செய்து கொள்ளும் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்தேன் என்றுகூறி இருந்தார். இவர் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை யார் என்று பலரும் எதிர் பார்த்து வந்த நிலையில் தற்போது ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. முன்னாள் சன் மியூஸிக் தொகுப்பாளர் மால் முருகன் என்பவரை தான் இவர் காதலித்து கரம் பிடித்துள்ளார்.