சூப்பர் ஸ்டாரின் ‘சந்திரமுகி’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி. யாரும் பாத்திராதா வீடியோ இதோ.

0
878
chandramukhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவருடைய படங்கள் வரப்போகிறது என்றாலே திரையரங்கில் ரசிகர்களின் கூட்டம் கடல் அலை போல் மோதும். அதோடு இவருடைய படங்கள் இன்றும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் படம் குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

- Advertisement -

சந்திரமுகி படம்:

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் குறித்து பலரும் அறிந்திராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் மனநல மருத்துவராக இருப்பார்.

சந்திரமுகி கதை:

தன் நண்பனின் மனைவியை காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைத்து போராடுவர் ரஜினி. அதேபோல் இந்த படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அது மட்டுமில்லாமல் காலம் கடந்தாலும் இந்த படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படமாக இருந்தது. பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான படமாக சந்திரமுகி இருந்தது.

-விளம்பரம்-

படத்தில் நீக்கப்பட்ட காட்சி வீடியோ:

இந்நிலையில் சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஓப்பனிங் சீனில் ரஜினியின் அந்த காட்சி வந்துள்ளது. ஆனால், அந்த காட்சி சில காரணங்களால் இயக்குனர் நீக்கி இருந்தார். தற்போது அந்த காட்சியை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அனைவரும் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், ரஜினியின் சந்திரமுகி படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்கள் மட்டும் அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

சந்திரமுகி 2 படம்:

மேலும், வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ரஜினியின் முழு அனுமதியோடு ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் பாகத்தையும் பி வாசு இயக்குகிறார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் அதிகமாக பேசப்படும் நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement