சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் கன்னட மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த சந்திரமுகி படத்தில் ராமச்சந்திரா ஆச்சாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. மேலும், சந்திரமுகி படத்தை தொடர்ந்து இவர் சிவா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து அவினாஷ் அவர்கள் தமிழில் சில படங்களில் நடித்திருந்தார். பிறகு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே இவர் பிரபல நடிகை மாளவிகாவை திருமணம் செய்து கொண்டார். அவர் வேற யாரும் இல்லைங்க, சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மாளவிகா அவினாஷ் நடித்த படங்கள்:
இவர் 2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜேஜே படத்தில் ஜமுனாவின் சகோதரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மாளவிகா அவினாஷ் ஆறு, ஆதி, கண்மணி என் காதலி, ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. பின் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.
மாளவிகா அவினாஷின் சின்னத்திரை பயணம்:
மேலும், இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாளவிகா அவினாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறியுள்ளது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றனர்.
காற்றுக்கென்ன வேலி சீரியல் கதை:
ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார். இப்படி பல விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.
வைரலாகும் மாளவிகா அவினாஷின் குடும்ப புகைப்படம்:
பின் திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் நடிகர் அவினாஷ் மற்றும் மாளவிகா அவினாஷ் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான க்யூட்டான நடிகையா! உங்கள் மனைவி என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், மாளவிகா மற்றும் அவினாஷின் குடும்ப புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.