சந்திரமுகி பொம்மிக்கு பிறந்த குட்டி பொம்மி – அவரே வெளியிட்ட Cute புகைப்படங்கள் இதோ.

0
828
bommi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். சமீபத்தில் அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த பேபி அனிகாவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இளம் வயதில் அவர் நடத்திய சில போட்டோ ஷூட்கள் தான் காரணம். அதே போல சிறு வயதில் நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது திருமனாகி செட்டில் ஆகிவிட்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-106.jpg

சந்திரமுகி பொம்மி :

அந்த வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் வந்த குழந்தை நட்சத்திரமும் தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் பொம்மியாக நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

- Advertisement -

தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட உருவாக இருக்கிறது. சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை ‘பொம்மி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை பொம்மி தான்.

This image has an empty alt attribute; its file name is 2-36.jpg

திருமண வாழ்க்கையில் நுழைந்த பொம்மி :

‘பொம்மி’ குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாக நடித்துள்ளார் இந்த குழந்தை. நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு திருமணம் முடிந்து உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

சந்திரமுகி இரண்டாம் பாகம் :

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதற்கு முன்னர் இயக்குனர் வாசு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் நடிக்கிறார். அதே போல இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சி போலத்தான் இருக்கும் என்றும் கூறி இருந்தார் வாசு ஒரு வேலை அப்படி இருந்தால் முதல் பாகத்தில் பொம்மியாக நடித்த பிரகர்ஷிதா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரஹர்ஷிதாவிற்கு பிறந்துள்ள மகள் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரஹர்ஷிதா, தற்போது படிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் கம்பெனி ஒன்றின் பணிகளை செய்து வருகிறேன். அதே போல பல்வேறு கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்த இருக்கிறது. ஆனால், தனது மகளின் புகைப்படங்களை தற்போது தான் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement