சந்திரமுகி படத்தில் ஜோதிகா பதிலாக முதலில் இந்த நடிகைதான் நடிக்க இருந்தார்.! புகைப்படம் உள்ளே.!

0
1035
chandramukhi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது.

chandramukhi

இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சிம்ரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், சில பல காரணங்களால் நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். 90 ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் இதுவரை ரஜினிக்கு ஜோடியாக எந்த ஒரு படத்திலும் நடித்தது இல்லை.

simran

ஒரு வேலை “சந்திரமுகி ” படத்தில் சிம்ரன் நடித்திருந்தால் ரஜினியின் படத்திலாவது நடிகை சிம்ரன் நடித்திருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை சிம்ரன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ரஜினி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.