மாற்றான் பாணியில் உலகப் புகழ்பெற்ற இரட்டையர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் மாற்றான். இந்த படத்தில் சூர்யா அவர்கள் ஒட்டி பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் ரியல் மாற்றான் இரட்டையர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். உலக புகழ் பெற்ற ஒட்டி பிறந்த இரட்டைகள் சாங் மற்றும் எங். இவர்கள் 1811 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பிறந்திருந்தார்கள். இவர்களுக்கு சியாமிஸ் இரட்டையர்கள் என்றும் பெயர் வைத்தார்கள். இது ஒரு பழைய வார்த்தையினுடைய தோற்றம் என்று கூறப்படுகிறது.

Advertisement

மாற்றான் பாணி இரட்டையர்கள்:

இவர்கள் இருவரும் ஒரு சிறிய தசை பகுதியால் தான் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இதை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கலாம் என்று சொன்னார்கள். இருந்தாலும், அவர்கள் மறுத்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் பரிசோதனையின் போது அவர்களுடைய கல்லீரல் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின் இருவரும் ஒன்றாக தான் தங்களின் வாழ்க்கையை தொடங்கினார்கள்.

சாங் மற்றும் எங் வாழ்கை:

இருவரும் இணைந்து தங்களுடைய 21 வது வயதில் வணிகம் தொழில் செய்து உச்சத்தில் இருந்தார்கள். இவர்கள் அமெரிக்கா, கனடா, கியூபா, ஐரோப்பா போன்ற பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்கள். இறுதியில் இவர்கள் வட கரோலினாவின் மவுண்ட் ஏரியாவில் குடி ஏறினார்கள். பின் இவர்கள் அடிலெய்ட் மற்றும் சாரா யேட்ஸ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய துணைவிகளுக்கும் தனியாக வீடுகளை வாங்கி கொடுத்து விட்டார்கள்.

Advertisement

சாங் மற்றும் எங் குடும்பம்:

இவர்கள் தங்களுடைய மனைவிகளுடன் சேர்ந்து 21 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். இரட்டையர்களால் அதிகம் குழந்தை பெற்றெடுத்தது இவர்கள்தான். சாங்-அடிலெய்ட் ஆகியோர் 10 குழந்தைகள் மற்றும் எங்-சாரா யேட்ஸ் ஆகியோர் 11 குழந்தைகளை பெற்று இருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவருமே கின்னஸ் புக்கில் இடம்பெற்றார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement

சாங்-எங் இறப்பு:

இவர்கள் எப்படி குழந்தை பெற்றார்கள் என்பதை குறித்த விவரம் எதிலுமே இடம்பெறவில்லை. இவர்களுடைய காலகட்டத்தில் தான் அடிமைத்தனமும் இருந்தது. அதை சட்டபூர்வமாக கொண்டு வந்தார்கள். பின் 1874 ஆம் ஆண்டு இவர்கள் தங்களுடைய 63 வது வயதிலேயே சாங் முதலில் இறந்தார். அதற்குப்பின் கொஞ்ச நேரத்திலேயே எங்கும் இறந்து விட்டார். இவர்களால் தாய்லாந்து நாடு பிரபலமானதால் இவர்கள் நினைவாக அந்த அரசு இவைகளுக்கு சிலை கூட வைத்துள்ளது.

Advertisement