மாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி.! இருப்புனும் ரசிகர்கள் மகிழ்ச்சி தான்.!

0
457
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Nerkonda-Parvai

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’படத்தின் ரீமேக் என்பது தெரியும். அதில் அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடித்திருந்தன.ர் தற்போது தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித்தும் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : ஹேக் செய்யப்பட்டது என்று புலம்பிய இறைவி நடிகை.! தற்போது அவரே வெளியிட்டுள்ள மோசமான புகைப்படம்.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தை பார்த்துவிட்டு பின்னர் பேசிய போனி கபூர், இந்த படம் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு கண்டு தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட்து. ஆனால், தற்போது வந்த தகவலின்படி இந்த படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அல்லது ஜூலை 25 ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதால் நேர்கொண்ட பார்வை படத்தை முன் கூட்டியே வெளியிட உள்ளனராம்.

-விளம்பரம்-

திட்டமிட்டதற்கு முன்பாகவே இந்த படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதை பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement