மெர்சல் படத்திற்கு வந்த பல சோதனைகளை கடந்து ஒரு வழியாக அந்த படம் சென்சாரில் U / A சான்றிதழ் பெற்றுள்ளது. ஆனால் கடந்த 8 வருடங்களாக வெளியான விஜய்யின் அனைத்து படங்களுமே U சான்றிதல் தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்திற்கு தான் கடைசியாக U / A சான்றிதழ் கிடைத்தது. அதன் பிறகு இப்போது தான் அவர் படத்திற்கு U / A சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதன் மூலம் அந்த படத்தில் நிச்சயம் நிறைய ஆக்சன் சீகுவன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதனால் தான் அந்த படத்திற்கு U / A சான்றிதழ் கிடைத்திருக்கும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.
எது எப்படியோ, வரும் தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியாக காத்திருக்கிறது. அப்போது தான் தெரியும் படத்திற்கு ஏன் U / A சான்றிதழ் கிடைத்தது என்று.




