‘மும்பை மாதிரி தென்னிந்தியா இல்லை’ – லைகர் பட தோல்வியால் புலம்பி தள்ளிய படத்தின் தயாரிப்பாளர் நடிகை சார்மி.

0
494
charmi
- Advertisement -

லைகர் படத்தை குறித்து நடிகை சார்மி கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது. கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
liger

மேலும், இவர் படங்களில் நடித்து மட்டும் வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

லைகர் படம் :

இந்த படத்தில் பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த படம் வெளியாகிய அன்றைய நாளிலேயே பெரும் தோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த அனைத்துவித ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். படத்தில் கதையே இல்லை எனவும், படம் படு மொக்கையாக இருக்கிறது எனவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

விமர்சனம் செய்த ரசிகர்கள்:

அதோடு படம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் தோல்வியை சந்தித்து விட்டது. ஒரு மொழியில் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டது லைகர் படம். இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து நெட்டிசன்கள் பலரும் விஜய் தேவர்கொண்டாவை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் தேவர் கொண்டாவின் திரை வாழ்க்கையிலே இது ஒரு மோசமான படமாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

நடிகை சார்மி அளித்த பேட்டி:

திரையரங்கில் லைகர் படத்தை காண சென்ற விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து கண்கலங்கி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் லைகர் படத்தை குறித்து நடிகை சார்மி கூறி இருந்தது, சமீப காலமாகவே ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே நல்ல கதை கொண்ட படங்களையும், பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே க்ளிக்கில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால் தான் தியேட்டருக்கு வருவார்கள்.

லைகர் படம் குறித்து நடிகை சார்மி கூறியது:

தெலுங்கில் வெளியான பிம்பிசாரா, சீதா ராமம், கார்த்திகேயா 2 போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் 150 முதல் 175 கோடி வரை வசூலித்திருக்கிறது. தென்னிந்தியாவில் முன்பை போல சினிமா மோகம் இருப்பதாக தெரியவில்லை. மேலும், கொரோனாவால் லைகர் படத்தை உருவாக்க மூன்று வருடம் ஆகிவிட்டது. பல கஷ்டங்களுக்கு பிறகு தான் லைகர் படத்தை தயாரித்தோம். ஆனால், படம் வெளியாகி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement