நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிய சாயா சிங் – இந்த தேதியோடு அவர் நடித்த கடைசி கடைசி எபிசோட்.

0
285
chayasingh
- Advertisement -

நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் இருந்து சாயா சிங் விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘மன்மத ராசா’ என்ற பாட்டு மூலம் பட்டித்தொட்டி முழுக்க புகழ்பெற்றவர் நடிகை சாயா சிங். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் சாயாசிங். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். இவர் மாடலிங் மூலம் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தார். பின் இவர் 2000 ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தொடர்ந்து சில படங்களில் கன்னடத்தில் நடித்து இருந்தார். பிறகு தான் திருடா திருடி படம் மூலம் கதாநாயகியாக சாயாசிங் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை சாயாசிங் தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு முன்னணி நடிகர்களில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் சாயாசிங் நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது திருடா திருடி படத்தின் மூலம் தான். அதற்குப்பின் விஜயுடன் கும்பிட போன தெய்வம் பாடல் மூலம் இவர் ஃபேமஸ் ஆகியிருந்தார்.

இதையும் பாருங்க : ‘என்னா தமாசா பேசுறாருயா’ எதார்த்தமாக பேசியதை வடிவேலு வசனத்தை போட்டு கலாய்த்த நெட்டிசன் – வீடியோவை கண்டு vpயும் லோக்கியும் போட்ட கமன்ட்.

- Advertisement -

சாயா சிங் திரைப்பயணம்:

இப்படி தொடர்ந்து இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது கேரக்டர் ரோல்களில் மட்டும் சாயாசிங் நடித்து வருகிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்தார். அதில் கடந்த 2011ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் நாகம்மா என்ற சீரியல் வெளியாகி இருந்தது. இது தான் இவர் முதலில் சின்ன திரையில் அறிமுகமான தொடர். இதை தொடர்ந்து சின்னத்திரையிலும் பிசியாக பயணித்து வருகிறார் சாயாசிங்.

நம்ம மதுரை சிஸ்டர்ஸ்:

மேலும், இவர் தெய்வமகள் சீரியல் புகழ் கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருமே தற்போது சீரியல்களில் பிசியாக களம் இறங்கி இருக்கிறார்கள். ரன், பூவே உனக்காக போன்று பல சீரியல்களில் சாயாசிங் நடித்து இருக்கிறார். தற்போது சாயாசிங் அவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது நான்கு சகோதரர்களின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்த தொடரில் மூத்த சகோதரி ஆக இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகும் சாயா சிங்:

இந்த நிலையில் தற்போது சாயாசிங் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மே 25ஆம் தேதிக்கு பிறகு ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் சாயா சிங் பதிலாக நடிகை ஸ்ருதி லட்சுமி என்பவர் இந்திராணியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஸ்ருதி லட்சுமி. இதற்கு முன்னதாக இவர் நீ வருவாயா என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். மேலும், நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல் துவங்கப்பட்டதில் இருந்தது சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சாயா சிங்.

ஸ்ருதி லட்சுமி

சாயா சிங் பதில் நடிக்கும் நடிகை:

சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் தொடரில் இருந்து விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர் விலகியதற்கு காரணம் குறித்து தயாரிப்பு தரப்பும், சாயாசிங் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் பதிலும் வரவில்லை.
ஆனால், சாயாசிங் பதிலாக ஸ்ருதி லட்சுமி நடிக்கிறார் என்று மட்டும் சேனல் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement