கோமாளியை கடுமையாக திட்டி விளாசிய தாமு. மரண பீதியில் நின்ற கோமாளி- என்ன ஆச்சு தெரியுமா?

0
696
arun
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம். மேலும், இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

-விளம்பரம்-
cooku

அதனால் கொரோனா லாக்டவுனில் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி இருந்தது என்றே சொல்லலாம். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ரோஷினி, வித்யூ லேகா என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா இருகிறார்கள். இவர்கள் வழக்கம் போல் தங்களுடைய கோமாளித்தனத்தை அழகாக செய்தீர்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

போட்டியாளர்கள் சீரிசாக சமைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் இருக்கும் கோமாளிகள் காமெடி பண்ணுவது, சொதப்புவது போன்ற வேலைகளை செய்வார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட வேலைகளையும் செய்வார்கள். சில சமயம் நன்றாக வரும் சமையல் கூட கோமாளிகளால் சொதப்பி விடும், சிலது பிரமாதமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவர்கள்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வரும் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். இருந்தாலும் சமையல் என்று வந்துவிட்டால் இரு நடுவர்களும் சீரிஸ் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் செஃப் தாமு கோமாளி ஒருவரை கடுமையாக திட்டி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய கோமாளியாக அறியப்பட்டவர் அருண். தனக்கே உரிய புதிய பாடி லாங்குவேஜ் மற்றும் திருட்டு முழி மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். இவர் அம்மு அபிராமி உடன் இணைந்து கோமாளித்தனம் செய்து சமைத்திருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் தாமு கோமாளியை திட்டிய விஷயம்:

இவருடன் அம்மு போராடி கஷ்டப்பட்டு சமையலை செய்து நடுவர்கள் இடம் கொண்டு வந்து வைத்தார். எதுவுமே தெரியாத பிள்ளையாக அருண் அம்மு அருகில் நின்று இருந்தார். அப்போது சமையலைப் பற்றியும், அதில் போட்ட பொருட்களை பற்றியும் செப் தாமோதரன் கேட்கிறார். அதற்கு அருணும் விளக்கம் கூறுகிறார். கொஞ்ச நேரம் அவர் சொல்ல செப் தாமு கடுமையாக அருணை திட்டி பேசுகிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. குத் கோமாளி செட்டே ஒரு நிமிடம் கதிகலங்கி விட்டது என்று சொல்லலாம்.

தாமு திட்டியதற்கு காரணம்:

அந்த அளவிற்கு ரொம்ப சீரியஸாக சென்றிருந்தது. பின் திடீரென்று தாமு குச்சி வைத்து எல்லாம் அருணை பின்னி பெடலெடுத்து இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் இது எல்லாம் பிராங்க் என்று சொல்லி செட்டையை கலகலப்பாக ஆக்கி விட்டார். ஆனால், ஒரு நிமிடம் அருணுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பயந்து போயிருந்தார். தாமு, அருணை கட்டிப்பிடித்த பிறகு தான் அவர் முகத்தில் சிரிப்பே வந்தது. இப்படி பல கலகலப்புடன் நிகழ்ச்சி சென்றிருக்கிறது. மேலும், இந்த வாரம் நிகழ்ச்சியில் நம்ம புகழ் கலந்து கொள்ள இருக்கிறார். இனி செட்டே ஒரே அமர்க்களம் தான்.

Advertisement