முதலமைச்சர் எடப்பாடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானம்..!நம்புங்க பாஸ்..!

0
228
Edappadi-Palanisamy

இந்திய மாநில முதல் அமைச்சர்களின் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும், குறைவான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு சில மாதத்திற்கு முன்னர் வெளியிட்டது.

Edappadi Palanisamy

அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்து இருக்கிறார்.அதேபோல குறைவான சொத்து வைத்திருப்பவர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் முதலிடம் பிடித்துள்ளார்.

மாநில முதல் அமைச்சர்களின் சொத்து விவர பட்டியலில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 12_வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 7 கோடியே 80 லட்சத்து 66 ஆயிரத்து 586 ரூபாய்.அந்த சொத்துக்கள் கூட அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் தான் இருக்கிறதாம்.

Edappadi-Palanisamy

பாலாஜி ப்ளூ கோட்டன்மை நிறுவனம் மற்றும் ஹரிஷ் கிருபா போன்ற நிறுவனத்தை எடப்பாடி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடபாடியின் சொத்து விவரம் கீழே காணலாம் வாருங்கள்.

* எடப்பாடி குடம்பத்தினர் நடத்தி வரும் நிறுவனத்தின் அவரது மனைவி பெயரில் 84 லட்ச ரூபாய் பங்கும், மகன் பெயரில் 34 லட்ச ரூபாய் பங்கும் இருக்கிறது.

* எடப்பாடியின் மருமகள் திவ்யா, ஈரோட்டில் ஸ்ரீ ஆண்டாள் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். அதன் மதிப்பு 1.12 கோடி

* 2011 ல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை 6 விவசாய நிலங்களை தனது மருமகள் மற்றும் மகன் பெயரில் எடப்பாடி வாங்கியுள்ளார்.அதன் மதிப்பு 1,88,65,000 ஆகும்.

* விவசாயம் அல்லாத நிலங்களின் மதிப்பு 7 லட்சம், குடியிருப்பு கட்டிடத்தின் மதிப்பு 82 லட்சம், மற்ற நிலங்களின் மதிப்பு 41 லட்சம். முதல்வர் வீட்டில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை வைத்துள்ளார்.

* முதலமைச்சர் 10 லட்சம் மதிப்பிலான கார்களை மட்டுமே வைத்துள்ளாராம். முதல்வரின் தின வருமானம் 6,575 ரூபாய். மாத வருமானம் 2 லட்சம்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் 3.67 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.