ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா..? வெளிவந்த ரகசியம்

0
862
- Advertisement -

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மல்டி ஸ்டார் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கார்த்திக், சின்மயி இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். ரசிகர்களின் ஆரவாரத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரியானார். அவரது ‘மழைக்குருவி’ பாடலோடு இசைவெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.

-விளம்பரம்-

AR Rahuman

- Advertisement -

அரவிந்த்சாமி – அதிதிராவ், அருண் விஜய் – ஐஸ்வர்யா ராஜேஷ் , சிம்பு – டயானா எரப்பா படத்தின் டிரெய்லரில் வந்ததுபோல் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி பேசினர். பிறகு மேடை ஏறிய வைரமுத்து, “வெற்றி தோல்விகளின் பாதிப்பு இல்லாமல், உடல்நலத்தின் தாக்கங்களைத் தாண்டி, பொருளாதார வீழ்ச்சிகளைத் தாண்டி ஒரு மனிதன் தொடர்ந்து முப்பந்தைந்து வருடங்கள் தொய்வின்றி அதே உணர்ச்சியுடன் இருக்க முடியும் என்றால் அது மணிரத்னம்தான்.

அதைப் பார்த்து வியப்படைகிறேன். இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. ‘செக்கச் சிவந்த வானம்’ என்று எந்த ஒரு தமிழனும் ‘ச்’ எனும் ஒற்றெழுத்தில் தமிழ் உட்கார்ந்து தமிழ் புலி போல பாய்கிறது. மெட்ராஸ் டாக்கீஸில் நிறைய சிறந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால், ஒரு மிகச் சிறந்த படைப்பை நீங்கள் தயாரிக்கவில்லை. கவிதாலயா தான் தயாரித்திருக்கிறது. அந்த படைப்புதான் ஏ.ஆர்.ரஹ்மான். பெய்யன பெய்யும் மழை எனும் என் கவிதையை காதல் பாடலாக பயன்படுத்தியதற்கு நன்றி” என்றார்.

-விளம்பரம்-

Jayaram Jayalalitha

பின் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மேடைக்கு அழைத்து இந்த காம்போவில் உருவான படங்களில் பிடித்தமான பாடல் எது என்று தொகுப்பாளர் கார்த்திக் கேட்க, ‘பம்பாய்’ படத்தின் ‘உயிரே உயிரே’ என்று வைரமுத்துவும், ‘பம்பாய்’ படத்தின் ‘தமிழா தமிழா’ என மணிரத்னமும் சொல்ல, ஏ.ஆர்.ரஹ்மானும் அதே படத்தில் ‘கண்ணாளனே’ என்று சொன்னார். ‘ஒருமுறை ஜெயலலிதா ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு வந்து ‘கடைசியா என்ன பாட்டுக்கு ட்யூன் போட்டீங்க?’ என்று கேட்டு இந்தப் பாடலை கேட்டுவிட்டுச் சென்றார்’ என்று தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் வைரமுத்து.

Advertisement