சிம்பு, விஜய் சேதுபதி,அருண் விஜய், அரவிந்த் சாமி..தெறிக்கவிடும் செக்கச் சிவந்த வானம் பட டிரைலர்.!

0
3596
chekka-sivantha-vaanam
- Advertisement -

‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், ‘செக்கச் சிவந்த வானம்’. தமிழ் சினிமாவில் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால், அது இந்தப் படத்துக்குதான். காரணம், தமிழ் சினிமா வரலாற்றில் மல்டி ஹீரோஸ் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

இப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதைத்தவிர படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

வித்யாசமான பேமிலி மற்றும் கெங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வழக்கமான மணிரத்னம் படத்தின் வசீகரமான வசனங்கள், ஆக்ஷன், லவ், செண்டிமெண்ட் என பல்வேறு அம்சங்களையும் பொருந்திய ஒரு ட்ரைலெராக அமைந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement