செக்க சிவந்த வானம் இந்த படத்தோட காப்பியா..? சிக்கியது ஆதாரம்.! எந்த படம் தெரியுமா.?

0
1069
- Advertisement -

கார்த்திக் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், ‘செக்கச் சிவந்த வானம்’. தமிழ் சினிமாவில் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால், அது இந்தப் படத்துக்குதான். காரணம், தமிழ் சினிமா வரலாற்றில் மல்டி ஹீரோஸ் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது.

-விளம்பரம்-

chekka Chivandha vaanam

- Advertisement -

இப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதைத்தவிர படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

வித்யாசமான பேமிலி மற்றும் கெங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வழக்கமான மணிரத்னம் படத்தின் வசீகரமான வசனங்கள், ஆக்ஷன், லவ், செண்டிமெண்ட் என பல்வேறு அம்சங்களையும் பொருந்திய ஒரு ட்ரைலெராக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ‘காட் பாதர் ‘ என்னும் ஹாலிவுட் படத்தில் இருப்பது போன்று உள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

god father

1974 ஆம் ஆண்டு வெளியான ‘காட் பாதர் ‘ மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல மணிரத்தினம் இயகத்தில் 1987 ஆம் ஆண்டு கமல் நடித்த’நாயகன்’ படம் வெளியான போதும் ‘காட் பாதர் ‘ படத்தின் சாயலில் இருந்ததாக அப்போதே சில கருத்துக்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது மீண்டும் ‘காட் பாதர் ‘ தழுவி கதையை மணிரத்தினம் மீண்டும் கையாண்டுள்ளார் என்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement