5 வருடம் காதலித்தோம் அவளுக்கு 6 வயது மகள் இருப்பதே எனக்கு இப்ப தான் தெரியும் – அர்னவ் சொன்ன அதிர்ச்சி தகவல்.

0
696
arnav
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அதை கேட்ட தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

- Advertisement -

இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து பேசி இருக்கும் அர்ணவ் ‘ என்னுடைய மனைவி கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திருவேற்காடு காவல் நிலையத்தில் இருந்து தகவல் வந்தது. நான் இது குறித்து அவர்களிடம் கேட்கும்போது நீங்கள் அவரை தள்ளி விட்டு அதனால் அவருக்கு ரத்தம் வந்திருக்கிறது என்று புகார் கொடுத்து இருக்கிறார் என்று என்னிடம் கூறினார்கள்.

அது முழுக்க முழுக்க பொய் அவர் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இவளுக்கு பின்னால் நடிகர் ஈஸ்வர்தான் இருக்கிறான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்குள் இருந்த பிரச்சனையை பெருசு படுத்தியது அவன்தான். எங்களுக்கு நல்லது செய்வது போல எனக்கு பல பிரச்சனைகளை அவன் தான் கொடுத்தான். நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து கொண்டிருந்தோம் அவர் விவாகரத்து ஆனவர் என்பது தெரியும். ஆனால் திருமணம் செய்யப் போகும் கடைசி நிமிடத்தில் தான் தனக்கு விவாகரத்து ஆனதையே அவர் சொன்னார்.

-விளம்பரம்-

மேலும், அவருக்கு குழந்தை இருப்பதையே எனக்கு சொல்லவே இல்லை. அவருக்கு ஒரு ஆறு வயதில் குழந்தை இருக்கிறது. நான் அந்த குழந்தையை நிறைய முறை பார்த்திருக்கிறேன். நான் யார் என்று கேட்கும் போதெல்லாம் அது தன்னுடைய குழந்தை என்று அவள் சொல்லவே இல்லை. அது தன்னுடைய அக்கா குழந்தை என்று சொல்லி என்னை இத்தனை நாட்களாக ஏமாற்றி இருக்கிறாள். நான் ஐந்து வருடங்கள் காதலித்து விட்டோமே என்று இதையெல்லாம் சகித்துக் கொண்டேன்.

நான் அவரை பிரிந்து வாழ போகிறேன் என்று சொல்லவே இல்லை. ஆனால், அவர் இந்த குழந்தையை வைத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அதை எந்த நோக்கத்திற்காக அவர் செய்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்பதால் நான் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறேன். உண்மையில் அவருக்கு ரத்தம் கசிந்து தான் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறாரா இல்லை நான் தள்ளி விட்டேனா என்பதை சிசிடிவி பார்த்தால் தெரிந்துவிடும். நேற்று கூட நான் காலையில் வெளியில் சென்று வந்த போது என்னை அடித்தார் இருக்கிறார். ஈஸ்வருடன் சேர்த்து அவன் தறுதலை நண்பர்கள் மீதெல்லாம் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் சொல்வது போல எனக்கு எந்த ஒரு நடிகையுடனும் தொடர்பு இல்லை என்று கூறி இருக்கிறார் அர்நவ்.

Advertisement