சென்னை பாக்ஸ் ஆபீஸ் – விவேகத்தை பின்னுக்குத் தள்ளியது மெர்சல்

0
1809

தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் பலரது பாராட்டினாலும் சிலரது எதிர்ப்பினாலும் தேசிய அளவில் செய்தி சேனல்களில் ஒரு வாரமாக கொடிகட்டிப் பறந்தது.
Actor Vijay

தேசிய ஊடகங்கள் 200 கோடி ரூபாய் வரை தற்போது வசூல் செய்துள்ளதாக அறிவித்தன. மேலும், சென்னை பாக்ஸ் ஆபீசில் அடுத்த்தடுத்து பல சாதனைகளை படம் வெளியான குறைந்த நாட்களில் செய்துள்ளது.

- Advertisement -

படம் வெளியாகி இன்று வரை 12 நாட்கள் ஆகிறது. இந்த 12 நாட்களில் சென்னையில் மட்டும் 10.88 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மெர்சல். 12 நாட்களில் எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்ததில்லை.
Ajith

மேலும், சமீபத்தில் வெளியான விவேகத்தின் வாழ்நாள் கலெக்சனை சென்னை பாக்ஸ் ஆபீசில் முந்தியுள்ளது மெர்சல். தற்போது மெர்சல் 4ஆவது இடத்தில் உள்ளது .
vivegam-ajith

-விளம்பரம்-

முதல் மூன்று இடத்தில் கபாலி, எந்திரன் மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்கள் உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சாதனையையும் மெர்சல் முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது.

Advertisement