முடிந்தது 41 ஆண்டு கால சகாப்தம், நிரந்தரமாக மூடப்பட்ட பிரபல உதயம் திரையரங்கம் – விவரம் இதோ

0
227
- Advertisement -

பிரபல திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கும் செய்தி தான் தான் தற்போது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்து இருக்கிறது. சென்னையில் பிரபலமான திரையரங்குகளில் உதயம் திரையரங்கமும் ஒன்று. 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்குகளில் ஒன்று. இந்த திரையரங்கம் கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளைக் கொண்டிருந்தது.

-விளம்பரம்-

அதற்குப் பின் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போதுதான் மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது. மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் பெரிய அளவில் கால் பதிக்காத அந்த காலகட்டத்தில் சென்னை ரசிகர்களின் ஆதர்ச திரையரங்குகளில் ஒன்றாக ‘உதயம்’ திரையரங்கும் திகழ்ந்தது. வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இந்த திரையரங்கம் மக்கள் கூட்டம் நிறைந்து ஜகஜோதியாக பிரகாசிக்கும்.

- Advertisement -

உதயம் திரையரங்கம் :

மேலும், இன்று உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் தங்களின் ஆதர்ச கதாநாயகன்களை கொண்டாடி தீர்த்த இடம் இந்த உதயம் திரையரங்கம். 10,15 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மேள தாள கொண்டாட்ட ஒலியுடன், உயரமான கட் அவுட்டுக்களுடன் கலகலப்பாக காட்சியளித்தது இந்த திரையரங்கம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் 100 ஃபீட் சாலையின் ஓரத்தில் தற்போது அமைதியாக காட்சியளிக்கிறது உதயம் திரையரங்கம்.

திரையரங்கம் மூடப்பட்டது :

அதாவது சும்மா 41 வருடங்களாக பலரின் பொழுது போக்கிற்கு முக்கிய இடமாக விளங்கிய உதயம் திரையரங்கம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் அசுர வளர்ச்சிக்கு பிறகு பழமையான திரையரங்குகள் பலவும் தற்போது இதுபோல மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 41 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக, எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கும் ‘உதயம்’ திரையரங்கம் மூடப்படுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலாளர் சொன்னது :

இந்நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவது உண்மைதான் என்று அதன் மேலாளர் ஹரி கூறியுள்ளாராம். அவர், ‘உதயம் தியேட்டர் குறித்து வெளியான செய்தி உண்மைதான். திரையரங்கம் மூடப்பட்டது. பிரபல காசாகிராண்ட் நிறுவனம்தான் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறாராம். மேலாளர் கூறிய இந்த செய்தி பலரின் இதயத்தையும் கணக்கச் செய்திருக்கிறது. சாலையில் செல்பவர்கள், திரையரங்கை சுற்றியுள்ள வியாபாரிகள் என பலரும் உதயம் திரையரங்கத்தை ஏக்கத்துடன் பார்த்தவரே கடந்து செல்கிறார்களாம்.

Advertisement