சென்னை பள்ளி ஆசிரியர், அரை குறை ஆடையில் ஆன் லைன் கிளாஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, வெளியான புகைப்படங்கள் – சின்மயி, கனிமொழி ஆவேச ட்வீட்.

0
150671
pbs
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதே போல சின்மயி தற்போதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சென்னை கே.கே.நகரில் பி.எஸ்.பி.பி தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஸ்க்ரீன் ஷாட் குறித்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மீது மனைவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஆதாரத்தை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

இதையும் பாருங்க : லட்ச கணக்குல செலவு செஞ்சு படிக்க வச்சி டாக்டர் ஆகணும்னு உங்க பெத்தவங்க கனவு காண்றங்க, ஆனா நீ என்னடானா – கடுப்பான நடிகை.

-விளம்பரம்-

இது தொடர்பான புகைப்படங்களையும் மாணவிகள் பகிர்ந்துள்ளனர். அதே போல மனைவி ஒருவருக்கும் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதோடு மாணவிகளின் போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார். ஆசிரியருக்கு போட்டோக்களை அனுப்பிய மாணவிகளில் சிலரிடம் `நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறியிருக்கிறார்.ஒரு மாணவியிடம் `நீ என்னுடன் படம் பார்க்க வா’ என்று கூறியுள்ளார்.

23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழியும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Home

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார். 

Advertisement