பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்து உள்ளனர். யூடுயூபில் Chennai Talk என்ற சேனலில் கடந்த சில வாரங்களுக்கு முன் 2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இப்படி ஒரு நிலையில் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார் அதில் பேசியுள்ள அவர் தான் ஒரு கின்னஸ் சாதனை செய்த ஒரு பெண் என்றும் தனக்கு எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியும் என்றும் என்னை அவர்கள் அணுகி என்ன பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதற்காக அவர்கள் 1500 ரூபாய் பணத்தையும் கொடுத்தார்கள் என்னை மட்டுமல்ல இப்படி பல பெண்களை அவர்கள் பணம் கொடுத்துதான் பேச வைத்து இருக்கிறார்கள். நான் புகார் கொடுத்ததற்கு முக்கிய காரணமே அந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செக்ஸ்சினை ஆப் செய்ய சொன்னேன். அவன் ஆப் செய்வதாக கூறிவிட்டு அப்படி செய்யவில்லை. இதனால் கமெண்டில் பலரும் என்னை திட்டியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பெற்றோர்களையும் திட்டினார்கள். என்னால் வெளியில் கூட செல்ல முடியவில்லை.
எங்கே சென்றாலும் இந்த பெண் தானே அது இவனெல்லாம் ஒரு பெண்ணா என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கொஞ்ச நாட்கள் நான் வெளியில் வரவே இல்லை. நான் மற்றவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் பேசவில்லை. இதுவே ஒரு ஆண் பேசியிருந்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள் இந்த பெண் ஏன் இப்படி பேசுகிறது என்று கேட்கிறார்கள். ஆனால், நான் இவ்வளவு தைரியமாக பேசி இருக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை. என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் பலரும் எப்படி ‘நீ இவ்வளவு தைரியமாக பேசி இருக்கிறார்’ என்றுதான் சொன்னார்கள். இருப்பினும் நான் பேசியது தவறுதான். ஆனாலும், நான் ஏன் பேசினேன் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பேட்டியின் போது இடையில் நானே கேட்டேன் இப்படி எல்லாம் பேச வேண்டுமா என்று அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.