ஆட்டோகிராஃப் ரீ-ரிலீஸ் பற்றி நடிகர் சேரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது.

அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருந்தது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார்.
சேரன் திரைப்பயணம்:
மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் பயணம். இந்த வெப்சீரிஸை ஓ டி டி தளத்தில் சேரன் வெளியிட்டு இருந்தார். இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்யபாரதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். சேரனின் இந்த பயணம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மீண்டும் சேரன் அவர்கள் இயக்கத்தில் இறங்கி இருக்கிறார். இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து தான் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நரி வேட்டை படம்:
இதை அடுத்து சேரன் வெப் தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது நடிகர் சேரன் அவர்கள் மலையாளத்தில் நடித்திருக்கும் படம் நரி வேட்டை. இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக டோமினோ தாமஸ் நடித்திருக்கிறார். இந்த படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சேரன் அவர்கள் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரொமோஷனில் ஆட்டோகிராப் ரீ-ரிலீஸ் குறித்து இயக்குனர் நடிகர் சேரன் கூறியிருப்பது, 2கே கிட்ஸ்களை கவர் பண்ணுவதற்காக தான் அந்த ஆட்டோகிராபில் ஏஐ ட்ரைலர் பயன்படுத்தியிருந்தோம்.
https://www.youtube.com/watch?v=FvDrOI1Qco4
நடிகர் சேரன் பேட்டி:
அப்போது தான் அவங்க எதிர்பார்த்து வருவார்கள். ஆனால், அன்றைக்கு கொடுத்த பொறுமையை நான் இன்றைக்கு எதிர்பார்க்க முடியாது. அப்போது அந்த படம் 2 மணி நேரம் ஐம்பது நிமிடம் இருந்தது. இப்போ இதில் 20 நிமிடம் நானே கட் பண்ணி இருக்கிறேன். எனக்கு இன்று பார்த்து இது க்ரிஞ்ச், இது பூமர் அப்படியெல்லாம் . தோணும் ரியாலிட்டியை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். காரணம், அன்று டேஸ்ட்டு எனக்கு தெரியாது. ஆனால், இப்போது எனக்கு என்னையே பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணி இருக்குமோ என்று தோணும்.
https://www.youtube.com/watch?v=dI7SbZfGT-Y
ஆட்டோகிராப் பற்றி சொன்னது:
அதனால் அதில் தேவை இல்லாததை கட் பண்ணிவிட்டேன். அதற்குப் பிறகு இன்றைக்கு சவுண்டு வேற மாதிரி இருக்கு. 2004ல் நாம கேட்ட சவுண்ட் இப்ப ரொம்ப பழசாக இருக்கும். இந்த சவுண்டையும் நாம வேற கொடுக்கணும்னு நான் ரிவொர்க் பண்ணி இருக்கிறேன். இப்போது படங்கள் எப்படி வருகிறதோ, அதே டெக்னாலஜியில் கொடுத்திருக்கிறேன். முதலில் வந்தது ஃபிலிம். இப்போது அதை ரீஸ்டோரேஷன் பண்ணிட்டு அதை ஏஐ பண்ணும் போது ஃபுல் கலர் டோன் மாதிரி இருக்கிறேன். ஒவ்வொரு போர்ஷனும் வேற வேற டோனாக மாற்றி இருக்கிறேன். இவ்வளவு கஷ்டத்தை கொடுத்து உழைப்பதற்கு காரணம் இன்று இருக்கிற ஆடியன்ஸ் முட்டாள் இல்லை. அவர்கள் ரொம்ப புத்திசாலி. அவர்களை ஏமாற்றினால் அது பிடிக்காது. அதனால் அவர்களுக்காக பொறுப்புடன் நம்ம ஒரு படம் கொடுக்கணும் என்று நினைக்கிறேன் அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார்.






