தன்னிடம் தவறாக நடந்ததாக கூறிய மீரா .! கதறி அழுத சேரன்.! என்ன நடந்தது.!

0
10622
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மீரா மற்றும் சேரன் இருவருக்கும் சண்டை போய்கொண்டு தான் இருக்கிறது. நேற்றைய டாஸ்கில் கூட இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் மீரா, சேரன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்து சேரனை அவமானத்தில் அழவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

சேரன் தன்னை தப்பான இடத்தில் பிடித்து தூக்கினர் என்று குற்றம் சாட்டினார் மீரா. நான் இந்த வீட்டிற்க்கு வந்த முதல் நாள் அவர் எனக்கு கை கொடுக்கவில்லை என்று கூறிய அவர். தனக்கு பெண்களை கட்டிப்பிடிக்க பிடிக்காது என்று கூறியிருந்தார்.

ஆனால், அதன் பின்னர் அவர் எப்படி மற்ற பெண்களிடம் பேசுகிறார் என்பதையும் நான் பார்த்தேன். ஆனால், நான் இப்பொது அதை பற்றி பேச விரும்பவில்லை. நான் டாஸ்க் செய்து கொண்டிருக்கும் போது என்னுடன் அபி மற்றும் சாக்க்ஷி இருந்தனர். அப்போது சேரன் சேரன் இடுப்பை பிடித்து தூக்கி போட்டு விட்டார். அது பிடித்து தூக்கும் இடமல்ல, அவர் என்னிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டது எனக்கு தவறாக நடந்தாக தோன்றியது என்று மீரா சேரன் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார்.

-விளம்பரம்-

மீரா தன் மீது இப்படி ஒரு பழியை போட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து போன சேரன், நான் ஒன்றும் உன்னை வேண்டுமென்றே அப்படி தூக்கவில்லை. டாஸ்க்கிற்காக தான் நான் அவரை பிடித்து தூக்கினேன். எனக்கும் இரண்டு பெண் குழந்தை இருக்கிறது.

என்மீது இப்படி அபாண்டமாக பழி போட்டால் என் மகள்கள் என்னை எப்படி மதிப்பார்கள் என்று கதறி அழ தொடிங்கினார் சேரன். மேலும், நான் தப்பான எண்ணத்தில் அவரை துக்கவில்லை இருப்பினும் நான் தூக்கி போட்டது அவருக்கு வலி ஏற்பட்ட்டால் அதற்கு மட்டும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் சேரன்.

Advertisement