மகள்களுக்காக தான் வாழ்கிறேன் என்று அழுத சேரன்.! ஆனால், மகளால் அவர் பட்ட கஷ்டம்.!

0
20910
Cheran
- Advertisement -

பிக் பாஸ்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மீது மீரா வைத்த அசிங்கமான குற்றச்சாட்டால் சேரன் மிகவும் மனம் வருந்தினார். நேற்றய நிகழ்ச்சியில் தனது மகளை எண்ணி கதறி அழுதார் சேரன். ஆனால், அவரது மகளால் சேரன் பல சிக்கலை சந்தித்துள்ளார்.

-விளம்பரம்-
Related image

சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள்இருக்கின்றனர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரனின் இளைய மகள் தாமினி சூளைமேட்டை சேர்ந்த டான்சர் சந்துருவை இயக்குநர் காதலித்தார். ஆனால், இவர்கள் காதலுக்கு சேரன் சம்மதிக்காததால் சேரன் மீது தாமினி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் சேரனை போலீசார் விசாரித்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா.! 

- Advertisement -

ஆனால், சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்தார். இந்த காதல் பிரச்சினை காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரங்களுக்கு மேல் குடும்பத்தினரை பிரிந்து தலைமை ஆசிரியர் வீட்டில் தாமினி வைக்கப்பட்டிருந்தார்.

Related image

பின்னர் மனம் மாறிய தாமினி, சேரனுடன் செல்வதாகக்கூறி சென்றார். தனது மகள் விவகாரத்தில் சேரன் மிகவும் நொந்து போனார். அதற்க்கு முன்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் இந்த பிரச்னையில் சேரன் மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார்.

-விளம்பரம்-
Image result for cheran daughter

தமிழ் சினிமாவில் பொற்காலம், வெற்றி கொடிகட்டு என்று பல ஹிட்களை கொடுத்த சேரன் லேட்டஸ்ட் ட்ரெட்ண்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தினறினார். சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதற்கு முக்கிய காரணமே புதிய அனுபவங்களை பெறத்தான் என்று சேரனின் நண்பரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கூட தெரிவித்துள்ளார்.

Advertisement