வாரிசு Vs துணிவு FDFS அலப்பறைகள் : ‘இந்த மாதிரி காட்சி வைங்க’ – தான் இயக்கிய படத்தின் வீடியோ பகிர்ந்த ரசிகர். சேரனின் Reaction

0
526
cheran
- Advertisement -

சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் செய்த ஆட்டூழியங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் நடிகர்கள் குறித்து சேரன் படத்தில் இடம்பெற்ற காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகியது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

ஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சோசியல் மீடியாவில் சரி, வெளியிலும் சரி பல மோதல்கள் ஏற்பட்டன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன, போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர். இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

- Advertisement -

ரசிகர்கள் மோதல் :

மேலும் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதினால் சாமானிய மக்கள் ரோடுகளில் செல்வதற்க்கே மிகக் கடினமாக இருந்தது. துணிவு மற்றும் வாரிசு இரு படங்களையும் உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதினால் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதித்ததாகவும். இதனால் தான் இப்படி சில கலவரங்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நடை பெறுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ரசிகர் உயிர் பலி :

இந்த சூழ்நிலையில் தான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டைனர் லாரி மீது ரசிகர் பரத்குமார் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முதுகுத்தண்டில் பலத்த காயம் கீழே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்களும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அஜித் மீது புகார் :

இந்த நிலையில் தான் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்கு பதிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக சு. ஆ பொன்னுசாமி வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் அஜித் பணம் சம்பாதிக்க மட்டுமே குறியாக இருக்கிறார், ரசிகர்களை நல்வழிபடுத்த தவறியதால் தற்போது பரத்குமார் என்ற இளைஞர் உயிரிழந்திருக்கிறார். ஆனால் இதற்கு அஜித் குமார் சார்பில் எந்த விளக்கமோ அல்லது இழப்பீடோ அவரின் குடும்பத்திற்கு கொடுக்கப்படவில்லை.

வைரலாகும் சேரன் பட காட்சி :

இதனை தமிழ் நாடு பால் வளத்துறை கடுமையாக கடிக்கிறது என்றும், அஜித் குமார் மீது குற்றவியல் வழக்கு பதிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சேரன் இயக்கிய ‘தேசி கீதம்’ படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை பகிர்ந்து ‘இந்த வீடியோவை இப்போ share பண்ணலாமானு யோசிக்குக் போது ; இந்த மாதிரியான காட்சிகளை தன் படத்தில் வைத்த இயக்குனர். சேரன் எவ்ளோ தைரியம் இருந்திருக்கும். எக்காலத்துக்கும் பொருந்தும் காட்சி !! Ur great sir சேரன் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சேரனும் இந்த பதிவை லைக் செய்து இருக்கிறார்.

Advertisement