மரியாதை குறைவாக பேசிய வடிவேலு, அவமானப்படுத்திய தயாரிப்பாளார் – அஜித்துக்கு நடந்த ஷாக்கிங் சம்பவம் குறித்து சொன்ன பிரபலம்.

0
1848
Vadivelu
- Advertisement -

அஜித்-பாலா இடையே ஏற்பட்ட ப்ரச்சனை குறித்து செய்யாறு பாலா அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, அஜித் என்றாலே நேர்மையான மனிதன், அன்பானவர், நல்ல குணம் கொண்டவர் என்று பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டவர். ஆனால், அஜித்திற்கும் வடிவேலுக்கும் இடையே ஒரு சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமா வட்டாரத்தில் கூட இவர்கள் சண்டை குறித்து பேசியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் தான் நடித்திருந்தனர்.

- Advertisement -

அந்தப் படத்தின் போது இருவருக்கும் சண்டை நடந்திருக்கிறது. அதனால் தான் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தில் கூட அவர்கள் தனித்தனி காட்சிகளில் நடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் அஜித்துடன் கடந்த 20 வருடங்களாக வடிவேலு நடிக்கவே இல்லை. அதற்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு வாப்பா போப்பா என்று அஜித்தை பேசி இருக்கிறார். அதோடு அந்த சமயத்தில் நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருந்தார்.

ராஜா பட இயக்குனர் எழில்

-விளம்பரம்-

இதனால் இவர் சில நேரங்களில் மரியாதை எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால், வடிவேலு சில நேரங்களில் மரியாதை குறைவாகவும் அஜித்டன் பேசி இருக்கிறார். இதனை அங்கிருந்தவர்களே கண்டித்து இருக்கின்றார்கள். அதன் பின்னரும் அஜித்- வடிவேலு இடையே சில சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அஜித் என்னுடைய படத்திற்கு வடிவேலு வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அதன் பிறகு தான் வடிவேலும், அஜித்தும் இணைந்து நடிக்கவே இல்லை.

இதே போல தான் பாலாவுடைய அஜித்திற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக செய்யாறு பாலு கூறியிருப்பது, பாலாவுடைய படங்கள் அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் அஜித் பாலாவுடைய ரசிகராகவே மாறிவிட்டார். பின் ஒரு நாள் அஜித் பாலாவிடம் சென்று, நான் உங்கள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியவுடன் பாலாவும் ஓகே சொல்லிவிட்டார். அதற்கு பிறகு தான் பாலா நான் கடவுள் படத்தினுடைய கதையை தயார் செய்து நீங்கள் இந்த படத்தில் நடிக்கலாம் என்று அஜித்துடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக தயாராகுங்கள் என்றும் அஜித்துடன் கூறியிருக்கிறார். அதற்காக அஜித்தும் நீளமான முடி, தாடி என்றெல்லாம் வளர்த்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் பாலா, இரண்டு தயாரிப்பாளர்கள், அஜித் என நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் அஜித் கதை கேட்டு இருக்கிறார். பொதுவாகவே பாலா தன்னுடைய கதையை யாரிடமும் சொல்ல மாட்டார். அஜித் கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த தயாரிப்பாளர் அஜித்தை அடித்து விட்டார். ஆனால், அதை அப்போது சொல்ல மறுத்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் செய்யாறு பாலு.

Advertisement