நாக சைத்தன்யா குடும்பத்திற்கு சமந்தா செய்ததை மறக்கவே மாட்டாங்க- உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்

0
322
- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார்.

-விளம்பரம்-

நாக சைதன்யா- சமந்தா இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபித்தா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது.
சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. சிலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் நாக சைத்தன்யாவை விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

செய்யாறு பாலு பேட்டி:

இந்த நிலையில் சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறிய விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சமந்தா சொத்துக்காக தான் நாக சைதன்யாவை பிரிந்தார் என்று கூறப்பட்டது. சமந்தா விவாகரத்து செய்த போது நாகார்ஜுனாவுக்கு ஹைதராபாத்தில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வீடு இருந்தது. அது மட்டும் இல்லாமல் நிறைய சொத்துக்களும் இருந்தது.

சமந்தா குறித்து சொன்னது:

இதை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்று தான் சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அப்போது அவர் ஜீவானந்தம்னாக பல கோடிகளை கேட்க நினைத்தார் என்றெல்லாம் பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், உண்மையில் நாக சைதன்யா மற்றும் அவருடைய குடும்பத்தினர் இடம் இருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் என்று சமந்தா கூறி வந்து விட்டார். சமந்தா செய்த இந்த தியாகத்தை நாக சைத்தன்யா குடும்பம் வாழ்நாளிலேயே மறக்காது என்று கூறியிருக்கிறார்.

Advertisement