மார்பக அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரத்திற்கு முன் செம டான்ஸ் ஆடிய நடிகை. அறுவை சிகிச்சைக்கு பின் வெளியிட்ட வீடியோ. ரசிகர்கள் உருக்கம்.

0
316
Actress
- Advertisement -

மார்பக அறுவை சிகிச்சை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு நடிகை ஆடிய நடன வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சமீப காலமாகவே அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் முதல் நோயாளிகள் வரை என பலரும் தங்களுடைய மனதை நிலையாக வைத்ததற்காக பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்ற சில விஷயங்களை செய்து வருகிறார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் சிகிச்சைக்கு முன் நடனமாடியிருக்கிறார்.

-விளம்பரம்-

தொலைக்காட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாவ்வி மிட்டல். இவருக்கு சமீபத்தில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ள இவர் ஒப்புக் கொண்டார். மேலும், அறுவை சிகிச்சை செய்வதற்கு சாவ்வி மிட்டல் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராகுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு நடிகை சாவ்வி டான்ஸ் ஆடி இருக்கிறார்.

- Advertisement -

நடிகை சாவ்வி நடனம் வீடியோ:

பின் அந்த டான்ஸ் வீடியோவை சாவ்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்கு பின் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சாவ்வி நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் சாவ்வி கூறியிருப்பது, மருத்துவர்கள் என்னிடம் கண்களை மூடிக்கொண்டு நல்லதை பற்றி யோசியுங்கள் என்று சொன்னார்கள்.

நடிகை சாவ்வி அறுவை சிகிச்சை:

நானும் எனக்கு புற்று நோய் குணமாவது குறித்து யோசித்தேன். அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது. இதனால் பெரிய விஷயம் என்னவென்றால், இப்போது புற்று நோய் நீங்கி நான் குணமாகி இருப்பது நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கெல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகள் தான் காரணம். எனக்கு இன்னும் உங்களுடைய பிரார்த்தனைகள் அதிகம் தேவை. ஏன்னா, நான் மிகவும் மனவேதனையில் இருக்கிறேன். அதை என்னுடைய முகத்தில் புன்னகையுடன் நான் காட்டுகிறேன்.

-விளம்பரம்-

நடிகை சாவ்வி பதிவு:

உங்களுடைய பிராத்தனைகளை நிறுத்தாதீர்கள். என்றைக்கும் உங்களுடைய அன்பு எனக்கு வேண்டும். எல்லோருக்கும் ரொம்ப நன்றி. உங்களுடைய செய்திகள் எனக்கு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. எல்லோருக்கும் நன்றி என்று உருக்கமான பதிவை பதிவிட்டிருக்கிறார். இப்படி நடிகை சிகிச்சைக்கு முன் நடனமாடிய வீடியோவும், சிகிச்சைக்கு பின் பதிவிட்ட பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிகிச்சையின் போது பாடிய பெண்:

இதை பார்த்த பலரும், உங்களுக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
அதேபோல் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண் ஒருவர் சிகிச்சையின்போது இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடி இருந்தார். அப்போது அவர் பாடிய பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் உலகத்திலேயே புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement