ஷாமிலி தமிழ் சினிமாவில் ராஜாநடை படத்தின் மூலம் அறிமுகமானவர்.
மற்ற மொழி படங்களிலும் சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஷாமிலி.
ஷாமிலி அவர்களின் இரண்டாவது படம் தான் அஞ்சலி இந்த படம் முழுக்க அஞ்சலி கேரக்டரை சார்ந்தே கதை நகரும்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஷாமிலி.
இதை தொடர்ந்து தமிழில் துர்கா ,தேவர்வீட்டு பொண்ணு போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரதிளும் நடித்துள்ளார்.
அதன் பிறகு ஷாமிலி விசுவல் கம்யூனிகேஷன் படிக்க சிங்கப்பூர் சென்று விட்டார். பிறகு சென்னை வந்த ஷாமிலி தான் திரைப்படங்களில் நடிக்க போவதாக தன்
அக்காவின் கணவரான தல அஜித்திடம் அனுமதி கேட்டிருக்கிரார். அதற்க்கு அஜித் மறுப்பு தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து ஷாமிலி தற்போது நடித்து கொண்டும் பிறகு படம் இயக்க போவதாக கூறி சம்மதம் பெற்றார்.அதன் பிறகு தமிழில் வெளியான வீரசிவாஜி படத்தில் விக்ரம்பிரபு விற்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷாமிலி.




