சீரியல் ஷூட்டிங்கில் இடைவிடாது குழந்தை அழுததை பார்த்து பெற்றோர்கள் வேதனைப்பட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீப காலமாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக சீரியல்கள் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சீரியல்களில் குழந்தைகளை பயன்படுத்துவது காலம் காலமாகவே இருக்கிறது. ஆனால், தற்போது அதிகரித்து வருகிறது. சின்னத்திரை மட்டுமில்லாமல் சினிமாக்களிலும் குழந்தைகளை நடிப்புக்காக பயன்படுத்தி வரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் பத்து மாத குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையுடைய எதிர்பக்கம் நின்று பெற்றோர்கள் அவள் அழுகையை நிறுத்த முயற்சி செய்திருந்தார்கள். இருந்தாலும், குழந்தை அழுது கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை அழுந்து கொண்டிருந்தது. அழுது அழுது அந்த குழந்தை சோர்வாகி தூங்கிவிட்டது. காரணம், அந்த சீனில் அந்த குழந்தை அழ வேண்டும் என்பதற்காக குழந்தையை அழ வைத்து இருக்கிறார்கள். இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறியிருந்தது, இப்போது குழந்தைக்கு விவரம் தெரிந்ததால் யாரிடமும் போக மாட்டுகிறாள். இப்படித்தான் அழுது கொண்டே இருக்கிறாள். நானும் போதும் என்று சொல்லி பார்த்து விட்டேன். இன்னையுடன் முடிந்து விடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பெற்றோர்கள் அளித்த பேட்டி:
குழந்தை அழுது அழுது கண் எல்லாம் சிவந்து வீங்கி போய்விட்டது. மூக்கும் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அவளுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை. குழந்தையோட அழுகையை யாருமே கண்டு கொள்ளாதது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சீரியலில் இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகமாக தான் நடந்து கொண்டிருக்கின்றது. இத்தனை வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை தான் சீரியலில் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு வரைமுறை கொண்டுவர வேண்டும். அழும் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டால் அந்த பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நடிகர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது வெளியே தெரிந்துவிடும். குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் வெளியேவே சொல்ல முடியாது.
தேவநேயன் அளித்த பேட்டி:
பெரிய பெரிய லைட்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும் நீ காசு வாங்கிட்டு தானே குழந்தையை நடிக்க வைக்கிறாய். அப்ப நான் சொல்வதைக் கேட்டு தான் ஆகணும் என்று புரொடக்சன் தரப்பிலிருந்து நடத்துகிறார்கள் என்று கூறி இருந்தார்கள். தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், எந்த துறை என்றாலும் குழந்தைகளை வழி நடத்துவது என்பதற்கான சில நெறிமுறைகள் இருக்கிறது. நலனை போற்றுதல், பாராட்டுதல், பாதுகாத்தல் என்ற மூன்றும் தான். குழந்தைகளுடைய சிறந்த நலன் என்பது குழந்தைகள் விரும்புவதில்லை.
குழந்தைகளின் நிலை:
பெற்றோர்கள் புரிந்து கொள்வது தான். ஒரு வயதில் இருக்கிற ஒரு குழந்தையை செயற்கையாக அழ வைப்பது அந்த குழந்தையை சித்திரவதை செய்வதற்கு சமம். இது குழந்தை மீதான வன்முறை தான். குழந்தைகள் மீது நடக்கக்கூடிய வன்முறையை நாம் கலை வடிவமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குழந்தைகள் மீது நடக்கக்கூடிய உடல் ரீதியான வன்முறை. இதனால் பயன்பெறப்போவது அந்த குழந்தை அல்ல. சினிமாவில் நடிக்கிறது பெரிசு தானே? அது ஒரு வாய்ப்பு தானே? என்பதெல்லாம் இரண்டாவது பட்சம். குழந்தையை துன்புறுத்தி பிரபலம் அடைய செய்வது என்பது சரியில்லை. குழந்தைகளுக்கான இயல்பான தன்மையை சுரண்டுவது அந்த குழந்தைகளுக்கான உரிமை மீறல்.
குழந்தைகள் நடிப்பதற்கான வழிமுறைகள் :
குழந்தை நட்சத்திரமாக இருந்து பிற்காலத்தில் பெரிய நட்சத்திரம் ஆகிறார்கள் என்பது பெற்றோர்களுடைய எண்ணம். எத்தனை பேர் அந்த மாதிரி இருக்கிறார்கள். ஒன்னு, ரெண்டு பேருக்காக ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படனுமா? குழந்தைகளுக்கும் ஒரு மனது இருக்கிறது. அவர்களுக்கான விருப்பம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீரியலிலும், சினிமாவிலும் இந்த மாதிரி வன்முறைகள் நடந்தால் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை National Commission for Protection of Child Rights போட்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாவிலும் சீரியலிலும் எந்த ஒரு சட்டமும் இன்னும் வரவில்லை. அதற்கான ரைட்ஸ் கண்டிப்பாக போடணும் என்று கூறியிருந்தார்.