‘அறை எண் 305-யில் கடவுள்’படத்தில் பிரகாஷ் ராஜுக்கு முன் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம். நல்ல வேல நடிக்கல.

0
36296
prakash
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சிம்பு தேவன். எப்போதும் புதிதாக ஒரு கதைக் களத்தில் தான் இவர் இயக்கிய படங்கள் இருக்கும். 2006-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இது தான் சிம்புதேவன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ‘வைகைப் புயல்’ வடிவேலு நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சிம்பு தேவன் இயக்கிய திரைப்படம் ‘அறை எண் 305-யில் கடவுள்’.

-விளம்பரம்-
Arai Enn 305-il Kadavul

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வெளி வந்த இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘S பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்திருந்தார். இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், ஜோதிர் மயி, மதுமிதா, சம்பத் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இன்றோடு (ஏப்ரல் 18-ஆம் தேதி) இப்படம் வெளி வந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#12YearsOfAraiEn305ilKadavul’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக பேசிய இயக்குநர் சிம்பு தேவன், இதுவரை படம் குறித்து வெளி வராத ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு ரோலில் நடித்திருப்பார். அது தான் படத்தில் வலம் வரும் அந்த கடவுள் கதாபாத்திரம். பொதுவாக அதற்கு முன்பு வரை வந்த தமிழ் படங்களில், கடவுள் வருவார்.. படம் முடியும் வரை அவர் கடவுளாகவே தான் காட்டப்படுவார்.. ஆனால், இந்த ‘அறை எண் 305-யில் கடவுள்’ படத்தில் இயக்குநர் சிம்பு தேவன் அதை வித்தியாசமாக யோசித்து, அந்த கடவுள் மனிதனாக மாறி, இவ்வுலகத்தில் வாழும் மனிதன் படும் கஷ்டத்தை எதிர் கொண்டு வாழ்வது போல் அமைத்திருப்பார்.

-விளம்பரம்-
Prakash Raj in Arai En 305il Kadavul

இந்த கேரக்டரில் பிரகாஷ் ராஜ் மிக அருமையாக நடித்திருப்பார். ஆனால், முதலில் இந்த கடவுள் ரோலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? அவர் நம் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியாம். அதன் பிறகு டிஸ்கஷனில் பிரகாஷ் ராஜின் பெயர் சொன்னதும், அவர் கச்சிதமாக பொருந்துவார் என்று நினைத்து இயக்குநர் சிம்பு தேவன் அவரை அணுகினாராம். ஆனால், பிரகாஷ் ராஜ், “நான் ஒரு வில்லன் நடிகர்.. என்னை கடவுள் ரோல்ல ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்று சிம்பு தேவனிடம் கேட்டாராம். “ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறி சிம்பு தேவன் அவரை கமிட் செய்தாராம். அதன் பிறகு பிரகாஷ் ராஜ் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்து அந்த கேரக்டரில் சூப்பராக நடித்துக் கொடுத்தார் என்று இயக்குநர் சிம்பு தேவன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement