1956 ஆம் ஆண்டே சென்னை வந்துள்ள சீன பிரதமர்.. எம் ஜி ஆர், சிவாஜியுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம்..

0
7210
modi
- Advertisement -

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடியின் சந்திப்பு தான் இன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சீன அதிபர் இன்று இந்தியா வருகைபுரிந்தார். நேரடியாக சென்னை அவரை சந்திக்க நாட்டின் பிரதமர் மோடியும் சென்னைக்கு வருகை புரிந்தார், சென்னை வந்தடைந்த சீன முதல்வர் மோடியுடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் தலைநகராக திகழ்ந்த கடற்கரை நகரமான மாமல்லபுரத்திற்கு சென்றார். அவர் வருகையை ஒட்டி சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பேருந்துகளில் கூட சீன மொழியில் இன்று டிஜிட்டல் பலகைகள் மின்னியது.

-விளம்பரம்-
View image on Twitter

மோடி மற்றும் சீன அதிபர் வருகையால் சென்னையை தலைக்கீழாக மாறியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மோடி மற்றும் சீன முதல்வரை வரவேற்றனர். அதே போல தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடி மற்றும் சீன பிரதமரை வரவேற்றனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோடி சென்னை வந்துள்ளார். மேலும்,வழக்கமாக அணியும் உடையை தவிர்த்து தமிழகத்தின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தார் பிரதமர் மோடி. சீன பிரதமர் மற்றும் மோடியின் இந்த சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.

- Advertisement -

ஆனால், ஒரு சீன அதிபர் தமிழகத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. 1956 ஆம் ஆண்டு அன்றைய சீனப் பிரதமர் சூ யென்லாங் அவர்கள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் மகாபலிபுரம் வந்திருந்தார், அப்போது இருவரும் இரு நாட்டு உறவுகள் பற்றி பேசினார்கள்,பின்னர் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் கலந்து கொண்டார், அப்போது அன்றைய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான நடிகர் திலகம் சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோருடன் சீனப் பிரதமர் புகைப்படம்எடுத்துக்கொண்டார் . சீன பிரதமருடன் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி சீன பிரதமரை சந்திப்பது ஆச்சரியமில்லை. ஆனால், தமிழக நடிகர் ஒருவர் அப்போதே மாநிலத்தின் நலனுக்காகவும், தனது சினிமா துறையின் நலனுக்காகவும் வேறு ஒரு நாட்டில் பிரதமரை சந்தித்த பெருமை நமது புரட்சி தலைவர் எம் ஜி ஆரை தான் சாரும். நடிகரும் தமிழக முதல்வருமான எம் ஜி ஆர், 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார். மேலும், எம் ஜி ஆர் சட்ட மன்ற உறுப்பினராக முதன் முறை பதவி ஏற்றது 1967 ஆம் ஆண்டு தான். எனவே, சீன பிரதமரை எம் ஜி ஆர் சந்திக்கும் போது அவர் எம் எல் ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

எம்.ஜி.ஆரின் திட்டங்களில் மகத்தான திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாகும். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெருகின்ற திட்டமாக இது இருந்தது. இந்த திட்டம் இன்றளவும் பின்பற்றுபட்டு வருகிறது. மேலும், எம் ஜி ஆர் வகுத்த பல திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் திட்டமாக அமைந்திருந்தது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை, காலனி, பற்பொடி, பாடநூல் என்று அனைத்தையும் அறிவித்தார். மேலும், அப்போதே மக்களின் நிலையைக் கண்டு இலவச திட்டங்களை அதிகம் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். மக்களின் நலன் கருதி பல திட்டங்களை தொடங்கப்பட்டிருந்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு இல்லாத திட்டங்கள் என்றே அரசியல் விமர்சகர்களால் இன்றளவும் விமர்சிக்கப்படுகின்றன.

Advertisement