பல பெண்களிடம் பாலியல் மிரட்டல்- கைதான நபர் மீது ஏற்கனவே சின்மை அளித்துள்ள புகார்.

0
130177
chin
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தது பலரும் அறிந்த ஒன்று. அதன் பின்னர் சினமயி சமூக வலைதளத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார். அதே போல இவருக்கு ஆபாசமாக மெசேஜ் செய்யும் நபர்களின் ஸ்க்ரீன் ஷாட்களை கூட அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பல்வேறு பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றத்தில் கைதான நபர் குறித்து தான் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாக சின்மயி புதிய ஷாக்கை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-29.jpg

நாகர்கோயில் மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி இவரது மகன் காசி என்னும் சுஜி என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டவர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ள காசி சமூக வலைதளத்தில் பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாகி பின்னர், தாம் ஒரு தொழிலதிபர் எனவும் வழக்கறிஞர் எனவும் விமான ஓட்டுனர் பயிற்சியை மேற்கொண்டு வரும் நபர் எனவும் பொய்யாக கூறியுள்ளார். மேலும், உடற்பயிற்சி செய்வது போல சில எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை கூட தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பெண்களை கவரவே காசி சமூகவலைதளத்தில் எப்படி தன்னை ஒரு அழகனாகவும் தொழில் அதிபராகவும் காட்சிப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும், சமூகவலைதளத்தில் பெண்களை நட்பு பிடித்த பின்னர் அவர்களிடம் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ,வீடியோ காலில் வல்லுறவில் ஈடுபட்டு பின்னர் அதனை அந்த பெண்களுக்கு தெரியாமலேயே புகைப்படத்தை எடுத்து இருக்கிறார்.

இவரை பெண்கள் யாராவது வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டாலோ அல்லது தங்களின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பினால் அதனை இவர் தனது பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை காண்பித்து அந்த பெண்களை பிளாக்மெயில் செய்து வந்துள்ளதாக காவல்துறை அதிகாரியான ஸ்ரீநாத் தெரிவித்திருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட ஒரு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் கையில் சிக்கியுள்ளார் இந்த சமூக வலைதள காதல் மன்னன்.

-விளம்பரம்-

விசாரணையில் காசி பள்ளி சிறுமிகள் முதல் பிரபல நடிகரின் மகள் வரை 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாயை பெற்றுள்ளார் எனவும், அதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் அடக்கம் என்றும் கூறியுள்ளனர். மேலும் விசாரணையில், சென்னையில் வசிக்கும் பிரபல நடிகர் ஒருவரின் மகளையும் காசி தனது காதல் வலையில் வீழ்த்த முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது. அந்த நடிகர் காவல்துறையை அணுகியதால் காசி பயந்து போய் ஒதுங்கி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

காசி மீது தற்போது புகார் கொடுத்த பெண்ணிடம் மட்டும் இருந்து 7 லட்சம் ரூபாய்க்கும் மேல் காசு பணம் பறித்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்திருந்த்னர. இந்த நிலையில் பாடகி சின்மயி கைதான நபர் குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில்,

Advertisement